லவ்டேல் மேடி
லவ்டேல் மேடி
Sunday, September 27, 2009
என் துணையே....
அதுவரை
புள்ளிகளற்ற கோலங்களாகவே
இருந்தன
என் தேடல்கள்.
மூன்றடி ஆழத்தில்
மூக்குத்தியின் முத்தளவில்
மூழ்கியிருந்த இந்த மனம்
உன் புன்னகை ஈர்ப்பால்
முன்னூறு வானமாய் விரிந்து
என் இலையுதிர் காலம்
இறக்கை நெய்தது.
இரவு முழுவதும்
உலா வந்த உன் நினைவுகள்
என் கண்ணோரத்தில்
பட்டாம்பூச்சிகளாய் வட்டமிட்டது.
நீ தந்த காலடி ஓசைகளை
அள்ளிவந்து
கனவுக்குக் கொளுசுகட்டிய பிறகே
நான் கானல் நீரில்
காயப் போட்டிருந்த
வாழ்க்கைச் சரம் வானவில்லாகி
என் மயக்கத்திலிருந்து
மலரத்தொடங்கின மலர்கள்.
நீ என்னருகே இருந்த
தருணங்களில்
பூங்காவனத்திலிருக்கும்
பூவினங்கள் கூட
வண்ணத்துப் பூச்சிகளாய்
வடிவம் பெற்று
பறந்து செல்லும்.
இப்போது
என் நிழலும்
என்னிலிருந்து விலகி
உன் முகம் பார்க்கத்தான்
முகவரி தேடிக் கொண்டிருக்கும்.....
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
//நீ என்னருகே இருந்த
தருணங்களில்
பூங்காவனத்திலிருக்கும்
பூவினங்கள் கூட
வண்ணத்துப் பூச்சிகளாய்
வடிவம் பெற்று
பறந்து செல்லும்.
இப்போது
என் நிழலும்
என்னிலிருந்து விலகி
உன் முகம் பார்க்கத்தான்
முகவரி தேடிக் கொண்டிருக்கும்.....//
அருமை மேடி.
//நீ என்னருகே இருந்த
தருணங்களில்
பூங்காவனத்திலிருக்கும்
பூவினங்கள் கூட
வண்ணத்துப் பூச்சிகளாய்
வடிவம் பெற்று
பறந்து செல்லும்.//
//நான் கானல் நீரில்
காயப் போட்டிருந்த
வாழ்க்கைச் சரம் வானவில்லாகி
என் மயக்கத்திலிருந்து
மலரத்தொடங்கின மலர்கள்.//
//என் இலையுதிர் காலம்
இறக்கை நெய்தது. //
மேடி...பின்னுறீங்க ....
//உன் புன்னகை ஈர்ப்பால்
முன்னூறு வானமாய் விரிந்து
என் இலையுதிர் காலம்
இறக்கை நெய்தது. //
ஆஹா..ஆஹா....!!!
//நீ என்னருகே இருந்த
தருணங்களில்
பூங்காவனத்திலிருக்கும்
பூவினங்கள் கூட
வண்ணத்துப் பூச்சிகளாய்
வடிவம் பெற்று
பறந்து செல்லும்.//
உங்களுக்குள்ள என்னமோ இருந்திருக்கு...
ஷேக் பண்ண ஷாம்பைன் பாட்டில் மாதிரி ( நன்றி:ரெமோ) லவ்வ பீய்ச்சி அடிக்கறீங்க தல..
வாழ்த்துகள்..கவிதை நல்லா இருக்கு !
//இரவு முழுவதும்
உலா வந்த உன் நினைவுகள்
என் கண்ணோரத்தில்
பட்டாம்பூச்சிகளாய் வட்டமிட்டது.///
அருமை ...!
எனக்கும் கல்யாணத்துக்கு முன்னாடி இப்படியெல்லாம் வரும் ...!
ஆனா இப்போ ????? (ஐயாம் பாவம்) ;;)))
ம்ம்.. நடத்துங்க..
அட அட... அருமை மேடி..
//மூன்றடி ஆழத்தில்
மூக்குத்தியின் முத்தளவில்
மூழ்கியிருந்த இந்த மனம்
உன் புன்னகை ஈர்ப்பால்
முன்னூறு வானமாய் விரிந்து
என் இலையுதிர் காலம்
இறக்கை நெய்தது.//
மேடி கலக்கல் கவிதை.ஒவ்வொரு வரிகளும் மனதின் ஆழத்தின் உணர்வுகளாய்.
அழகோ அழகு கவிதை. அசத்துறீங்க மேடி.
//நான் கானல் நீரில்
காயப் போட்டிருந்த
வாழ்க்கைச் சரம் வானவில்லாகி//
அழகு
//இரவு முழுவதும்
உலா வந்த உன் நினைவுகள்
என் கண்ணோரத்தில்
பட்டாம்பூச்சிகளாய் வட்டமிட்டது.//
ஆகா....அழகு....
கல்யாண நாளுக்கு தயாராகிட்டீங்க போல....வாழ்த்துக்கள்....
வழக்கம்போல அழகு கவிதை
வாழ்த்துகள் மேடி
//இப்போது
என் நிழலும்
என்னிலிருந்து விலகி
உன் முகம் பார்க்கத்தான்
முகவரி தேடிக் கொண்டிருக்கும்.....//
கண்டிப்பா கிடைக்காது
@ ராமலக்ஷ்மி சகோதரி ,
ரொம்ப நன்றிங்க சகோதரி ..
@ ஈ ரா ,
ஆஹா... ரொம்ப நன்றிங்க தோழரே..
@ அ.மு.செய்யது ,
வாங்க தம்பி.. எனக்கு ஷாம்பு பாட்டில்தான் தெரியும் ... ஷாம்பைன் பாட்டில்னா என்னானே தெரியாது....!! ஹி..ஹி..ஹி...!!
ரொம்ப நன்றிங்க தம்பி...
@ ஜீவன் ,
அய்யய்யோ....!! கேப்டன்சி..... இப்பவே பயமுறுத்துறீங்களே....!! இன்னும் கொஞ்ச நாள்ல நானும் உங்கள மாதிரிதான் பின்னூட்டம் இடபோறேன்னு நினைக்குறேன்..!! அஆவ்வ்வ்...!!!
ரொம்ப நன்றிங்க கேப்டன்ஜி...
@ பட்டிக்காட்டான்,
ரொம்ப நன்றிங்க தோழரே..
@ கலகலப்ரியா சகோதரி ,
ஆஹா....!! ரொம்ப நன்றிங்க சகோதரி ..
@ ஹேமா சகோதரி ,
உண்மைதானுங்க.... " ஒவ்வொரு வரிகளும் மனதின் ஆழத்தின் உணர்வுகளாய்.." ஆனா யென்ர அம்முனி இன்னும் இந்த கவிதைய படிக்கலையாம்....!! அஆவ்வ்வ்.....
ரொம்ப நன்றிங்க சகோதரி ..
@ வானம்பாடிகள் ,
ஆஹா...!! ரொம்ப நன்றிங்க தோழரே..
@ கதிர் - ஈரோடு ,
ரொம்ப நன்றிங்க தோழரே..
@ க.பாலாஜி ,
" கல்யாண நாளுக்கு தயாராகிட்டீங்க போல "
ஆமாங்க தம்பி........ஆஅவ்வ்வ்வ்வ்......!!
ரொம்ப நன்றிங்க தம்பி..
@ நேசமித்ரன்,
ரொம்ப நன்றிங்க தோழரே..
@ நசரேயன் ,
ஆஅவ்வ்வ்வ்....!! வானக தல......
இப்போது
என் நிழலும்
என்னிலிருந்து விலகி
தல நசரேயன்
முகம் பார்த்து
மொக்க கதை சொல்ல
முகவரி தேடிக் கொண்டிருக்கும்.....
ரொம்ப நன்றிங்க தல....
இதுவேறயா :)
அடங்கப்பா சாமி
போதும் டா டேய்
இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு
அது வரைக்கும் பொறு ராசா :-))
அருமை...அருமை.!
@ எம்.எம்.அப்துல்லா ,
ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்.....!! உங்கள் பாடலை கேட்க ஆவலுடன் ஓடோடி வருகிறேன்.... ஏமாற்றிவிடாதீர்கள் அண்ணே.......!!
@ கார்த்திக் ,
நீங்க சொன்னா சரிதானுங்ணேவ்....!!!
@ இரவீ ,
ரொம்ப நன்றிங்க தோழரே...
தல ஸ்டாக் வையுங்க!
கல்யாணம் முடிஞ்ச பிறகும் நிறையா தேவைப்படும்!
@ வால்பையன்,
// தல ஸ்டாக் வையுங்க!
கல்யாணம் முடிஞ்ச பிறகும் நிறையா தேவைப்படும்! //
கண்ணாலம் முடுஞ்சதுக்கு அப்புறம் கவிதையெல்லாம் வராது... என்னோட அலறல் சத்தம்தான் வரும்.....!!
நெம்ப தேங்க்ஸ் பாஸ்...
கல்யாணத்துக்கு அப்புறம் உன்னால இப்படி கவிதை எழுத முடியாது
எனா ?
வீட்டு வேலை நிறைய இருக்கும் .
எதுவா இருந்தாலம் இப்பவே போஸ்ட் பன்னிரு .
எங்கனம்
உன் தம்பி
நல்லா இருக்குங்க.....
@ karthikharish ,
நீங்க சொன்னா சரீங்க தம்பி......
@ JACK and JILLU ,
ரொம்ப நன்றிங்க தம்பி.....
நல்லாயிருந்ததுங்க!
@ ஊர்சுற்றி ,
ரொம்ப நன்றிங்க தோழரே..
//தல ஸ்டாக் வையுங்க!
கல்யாணம் முடிஞ்ச பிறகும் நிறையா தேவைப்படும்!//
//கண்ணாலம் முடுஞ்சதுக்கு அப்புறம் கவிதையெல்லாம் வராது... என்னோட அலறல் சத்தம்தான் வரும்.....!!//
அம்மணி இதைப் படிச்சா உம்மோட அடுத்த பதிவே அலறலாத்தான் இருக்கும் ஐயா...
வால் சார் மாதிரி அனுபவஸ்தர் சொல்லறத கேளுங்க...
@ ஈ ரா ,
// அம்மணி இதைப் படிச்சா உம்மோட அடுத்த பதிவே அலறலாத்தான் இருக்கும் ஐயா...
வால் சார் மாதிரி அனுபவஸ்தர் சொல்லறத கேளுங்க... //
தல ... இப்புடி அடிக்கடி பீதிய கெளப்புறீங்களே....!!
அன்பின் மேடி
கவிதை அருமை - காதல் கவிதை அருமை
//இரவு முழுவதும்
உலா வந்த உன் நினைவுகள்
என் கண்ணோரத்தில்
பட்டாம்பூச்சிகளாய் வட்டமிட்டது.//
சரி சரி ரொம்ப அலைய வேணாம் - தேதி தான் முடிவாயிடிச்சில்ல
ஆமா ஷாம்பெய்ன் தெரியாதா - வாலு அம்பானி இவங்க ப்ஃரெண்டு தானெ நீ
நல்வாழ்த்துகள் மேடி
@ சீனா ,
மிக்க நன்றிங்க தோழரே....
திரு. லவ்டேல் மேடி அவர்களே..
தயவு செய்து மற்றவரின் கவிதை நூலில் இருந்து
கவிதைகளை எடுத்து பதிவு செய்யவேண்டாம்.
இந்த கவிதை அனைத்தும் கவிஞர் திரு.மணிவசந்தம்
என்பவர் “ மின்னல் கொடிகள்” என்ற கவிதை நூலில்
2003 ஆண்டு வெளியிடப்பட்டது..
இந்த புத்தகத்திற்கு திரு.அறிவுமதி (திரைப்பட பாடலாசிரியர்) அனிந்துரை எழுதி உள்ளார்.
மற்றவரின் பாராட்டை பெற உங்கள் திறமையை வெளிப்ப்டுத்துங்கள்..
Post a Comment