லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Sunday, September 13, 2009

மீண்டும் மலர்வாய்......நீ
மீண்டும் மலர்வாய்...

தொலைந்த
உனது வசந்தங்களுக்காக
புழுதி நனைய பூத்த
உனது
குருதி மணிகளைக் காண
ஆழ்ந்து
வேர் பரப்பி
படர்ந்து
கிளைவிட்டு நிற்கும்
உனது
விதைகளின்
விருட்சங்களைக் காண
விண்ணையும் மண்ணையும்
அளந்து
வியாபித்த
உனது
மகரந்தச் சேர்க்கையின்
புதிய
புஸ்ப்பங்களைக் காண
முகை வெடித்து
பூபெய்திய
சிவந்த மலர்களின்
சின்ன இதழ்களில்
சிரித்திருக்கும்
நீர்த் துளிகளைப் போல
உன்
கனவுகள்
நனவாகி
கைகள் கொண்டு
வரவேற்க
தலைசாய்த்து நிற்கும்
நெற் கதிர்களும்
குலை தள்ளிய
வாழைகளும்
வாழ்த்துச் சொல்ல
கழுகுகள் பறந்த
கருவானம்
நிர்மலமாகி
வெண்புறாக்கள்
உலா வர
புன்னகை போர்த்தி
கால்களை ஊன்றி
நீ
தவழ்ந்து விளையாடிய
புழுதியை முகர்ந்து
ஓடித் திரிந்த
வரப்புகளில்
நடந்து வர
தோழனே!

நீ
மீண்டும் மலர்வாய்.......

10 comments:

வானம்பாடிகள் said...

ஆமாம் மேடி. நடக்கணும் இது. இத்தனை தியாகத்துக்கும் அர்த்தம் இருக்கணும். நன்றிங்க மேடி.

கலகலப்ரியா said...

:((...

ஈ ரா said...

அன்பு லவ் டேல்,

அன்பு லவ் டேல்,

உங்கள் நீண்ட தொடர் எழுத்து வியக்க வைக்கிறது... வாழ்த்துக்கள்...

ஒரு நெடும் பயணத்தை
நிறைவாக நிறைவு செய்ய முடியாமல்
எங்கோ வெளியில்
நிறைந்து நிற்கிறான் அவன்..

இனியொருமுறை மலர்ந்தால்
அப்போதாவது அவனுக்கு
முட்களும் களைகளும்
முடமாக்கப்பட்டு
மலர்ப்பாதை கிடைக்கட்டும்..

*****

என் எழுத்துக்களையும் இங்கே சமர்ப்பிக்கிறேன்..(நீங்கள் அனுமதித்தால் )

ஈ ரா

*****

குழல் கொடுமை யாழ் கொடுமை என்பர்
தம்மக்கள் குரல் மறையக் காண்கின்றவர்!

ஆண்மை இருக்கும் இறையே -
இனியாவது நாங்கள்
இறையாண்மைக்கு இரையாகாமல் காப்பாய்!

அன்றோ ஒரு காலம் உண்டு!
வனம் எல்லாம் வனப்புடனே நின்று!
இன்றும் ஒரு ஞாலம் உண்டு
இனம் மரிக்கக் காணாமல் கண்டு!

ஒன்பதுதான் கிடைத்தது - இனி
ஓய்வெடுக்கப் போகலாம்!
இருபத்தெட்டு கிடைத்தது - இனி
இலாக்காக்கள் கேட்கலாம்!
ஒன்றுமே கிடைக்கவில்லை - இனி
ஒப்பாரி வைக்க வேண்டாம்!
தனியாகவே வந்துவிட்டோம்- இனி
தமிழாவது மண்ணாவது?

பாவிகளா -
ஆதிமனிதனைப் போல்
அர்த்தமில்லா ஊளையோடே
இருந்து இருக்கலாம்!

பாழாய்ப்போன மொழியை நம்பாத
ஊமை சகோதரர்களே
உண்மையிலேயே உங்களைப்
பார்த்துப் பொறாமைப் படுகிறோம்!

நாங்கள் இப்போதெல்லாம்
வருத்தப்பட்டு பாரம் சுமப்பது இல்லை!
உயிரும், உற்றார் உடல்களும்
என்றைக்காவது பாரமாகுமா என்ன?

நாங்கள் இப்போதெல்லாம்
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
என்று நினைப்பது இல்லை! - ஒருவேளை
ஏதாவது நன்றாகவே நடந்தாலும்
அதைப் பார்ப்பதற்கு நாங்கள்
இருக்கப் போவதுமில்லை!

நாங்கள் இப்போதெல்லாம்
மேற்கு நோக்கி புனிதம் தேடி
யாத்திரிப்பதில்லை! - ஏனெனில்
எங்கள் வழி நெடுகிலும்
மனிதம் மண்ணுக்கு உள்ளேதான்
மலையாகக் கிடக்கிறது!

அழுத பிள்ளை பால் குடிக்குமாம்
உங்கள் ஊரில்! - இங்கோ
குழந்தைகள் அழுவது -
அம்மா நான் உயிரோடு இருக்கிறேன்
என்று உணர்த்திடவே!

பல நூறு ஆண்டுகள் முன்
போரிலே வென்ற மன்னர்
பகை நாட்டின் வயல் அழித்து
வெள்ளெருக்கும் ஆமணக்கும்
விதை விதைத்து - கோவேறு
கழுதைகளால் உழுதிட்டு
கடுஞ்சினத்தை தீர்ப்பனராம்!

இன்றும் பாவி மக்கள்
போரென்ற பேரினிலே
பார் முழுக்கப் பார்த்திடவே
இரு நாட்டின் இனம் அழித்து
ஈயத்தை இதயத்தில்
விதை விதைத்து - ஈனப்
பன்றிகளால் உழுதிட்டு
உயிர் அறுவடை செய்கின்றார்!

வாழ்க உங்கள்
விஞ்ஞான விவசாயம்!
வளர்க உங்கள்
நவீன யுகப் புரட்சி!

சங்க காலம் தொட்டு வரும்
சண்டை காலம் முடியவில்லை!
எங்க காலம் போயாச்சு! - எம்
பிள்ளையாச்சும் பிழைக்குமா?

எங்களுக்கு எல்லாம் ஒரே ஒரு
அற்ப மகிழ்ச்சி! -
இத்தலைமுறையில் யாருமிங்கே
வாழ்ந்து கெட்டவர் இல்லை!
நாங்களெல்லாம் - ஒரு நாள் கூட
நிம்மதியாக வாழாமலே கெட்டுவிட்டோம்!


---
அன்பு இல்லாத

ஈ ரா

க.பாலாஜி said...

//நீ
தவழ்ந்து விளையாடிய
புழுதியை முகர்ந்து
ஓடித் திரிந்த
வரப்புகளில்
நடந்து வர
தோழனே!//

உணர்வுள்ள தமிழனின் எண்ணமும் ஏக்கமும் கூட இதுதான்....

நேசமித்ரன் said...

நம்பிக்கை பொய்த்து போகாமல் இருக்க பிரார்த்தனைகள் நிராகரிக்கப் படாமலிருக்க
தெய்வங்கள் துணை வரட்டும் மேடி

ஜீவன் said...

நம்பிக்கையும்,வேண்டுதல்களும்!

ஹேமா said...

ஓ...மேடி நான் கவனிக்கவே இல்லையே.கண்கள் நிறைந்த கண்ணீர்.அந்த உருவம்...சொல்ல வருகுதில்லை எழுத முடியவில்லை.
ஏன் என்கிற கேள்விகள் நிறைய இருக்கு.வரட்டும் பார்த்திருக்கிறேன்.

லவ்டேல் மேடி said...

@ வானம்பாடிகள் ,

ஆமாங்க... உறுதியா நடக்கணும் ..... !! வருகைக்கு நன்றிங்க தோழரே ...
@ கலகலப்ரியா ,

வருகைக்கு நன்றிங்க சகோதரி ...

@ ஈ ரா ,

// உங்கள் நீண்ட தொடர் எழுத்து வியக்க வைக்கிறது... வாழ்த்துக்கள்... //

ரொம்ப நன்றிங்க...


// என் எழுத்துக்களையும் இங்கே சமர்ப்பிக்கிறேன்..(நீங்கள் அனுமதித்தால் ) //

உங்களுக்கு இல்லாததா தோழரே.....


....................................

உங்கள் வரிகளின் உணர்வு வெளிப்பாடுகள் என்னை ஸ்தம்பிக்கச் செய்தது...!! அதை உயிரோட்டத்துடன் நினைவுகளில் காட்சிகளாக ஓடவிட்டால் ... கண்கள் குளமாகியது...


@ க.பாலாஜி ,

ஆமாம் பாலாஜி ... வருகைக்கு நன்றி பாலாஜி ...@ நேசமித்ரன் ,

நம்பிக்கையுடன் இருப்போம்...... வருகைக்கு நன்றிங்க தோழரே...
@ ஜீவன் ,

அது நிறைவேரவேண்டும் கேப்டன்ஜி .... வருகைக்கு நன்றிங்க கேப்டன்ஜி...
@ ஹேமா ,

ஆமாங்க.... கஷ்ட்டமாத்தான் இருக்கு...... வருகைக்கு நன்றிங்க ...

விஜயகுமார் said...

திரு. லவ்டேல் மேடி அவர்களே..
தயவு செய்து மற்றவரின் கவிதை நூலில் இருந்து
கவிதைகளை எடுத்து பதிவு செய்யவேண்டாம்.
இந்த கவிதை அனைத்தும் கவிஞர் திரு.மணிவசந்தம்
என்பவர் “ மின்னல் கொடிகள்” என்ற கவிதை நூலில்
2003 ஆண்டு வெளியிடப்பட்டது..
இந்த புத்தகத்திற்கு திரு.அறிவுமதி (திரைப்பட பாடலாசிரியர்) அனிந்துரை எழுதி உள்ளார்.
மற்றவரின் பாராட்டை பெற உங்கள் திறமையை வெளிப்ப்டுத்துங்கள்..

விஜயகுமார் said...

திரு. லவ்டேல் மேடி அவர்களே..
தயவு செய்து மற்றவரின் கவிதை நூலில் இருந்து
கவிதைகளை எடுத்து பதிவு செய்யவேண்டாம்.
இந்த கவிதை அனைத்தும் கவிஞர் திரு.மணிவசந்தம்
என்பவர் “ மின்னல் கொடிகள்” என்ற கவிதை நூலில்
2003 ஆண்டு வெளியிடப்பட்டது..
இந்த புத்தகத்திற்கு திரு.அறிவுமதி (திரைப்பட பாடலாசிரியர்) அனிந்துரை எழுதி உள்ளார்.
மற்றவரின் பாராட்டை பெற உங்கள் திறமையை வெளிப்ப்டுத்துங்கள்..