உன்
நெற்றி வேர்வையில்
வெண்ணிலா தொட்டுச்
சின்னச் சிரிப்பொலியில்
வண்ணத்துப்பூச்சி பிடித்து
கொலுசுமணி சத்தத்தில்
நாளெல்லாம் முத்தம்பெற்று
இன்று
காயங்களுடன்
காத்திருக்கிறேன்.
கொஞ்சம்
குனிந்து பாரடி
உன் தண்ணீர்க் குடத்திற்குள்
நான் சிந்திய
கண்ணீர்க்குளங்கள் !
அதில்
என் நினைவு மீன்கள்
படகுப் பாடையில் அல்லவா
நீந்திக் கொண்டிருக்கின்றன .
தேவதையே !
நம் காதலில் வளர்த்த
இந்த நந்தவனம்
கந்தகத் திரவத்தில் தான்
காலூன்ற வேண்டுமெனில்
வாழையிலை போல்
கிழிந்துபோன
என் வாழ்க்கையும்
வரும் கணங்களில்
தேய்பிறையில் தான்
பாய் விரிக்குமா ?
முன்பெல்லாம்
என் துக்கத்தைத் துடைப்பதற்கு
நீ வெட்கத்தைக் கொண்டுவந்து
தருவாய்
இனி
எனக்குள்ளிருக்கும்
மன அறைகளில்
மரணவிழாவைத் தானே
கொண்டாட முடியும் .
இதுவரை
நம் உறவுப் பானையில்
ஊறிய ஞாபகப்பாகைப்
பிரிவுத் தீ தின்பதற்கா
தேக்கிவைத்தோம் ?
நின்றுசொல்
தமிழ்ச் செல்வியே !
இதோ !
உன் இமைகளின் சிறகடிப்பில்
சிக்கிக்கொண்டு
என் இரு கண்களும் துண்டாகித்
துடிதுடிக்கிறது !
முதலில்
இதன் வெப்ப வேதனைக்கு
மயிலிறகு விரல்களால்
மருந்து கொடு
கரைசேரட்டும்
இல்லையெனில்
உன் தாழம்பூ மனதின்
சன்னல் திறந்துவை
உன்னுள் இறங்கி
என்னை புதைத்துவிடுகிறேன்.
- லவ்டேல் மேடி ..........
28 comments:
அண்ணா
அருமை. வருகைக்கு நன்றி . படியுங்கள்
ஜனனம் = ஜென்மம்
\\உன் தண்ணீர்க் குடத்திற்குள்
நான் சிந்திய
கண்ணீர்க்குளங்கள் ! \\
\\இதோ !
உன் இமைகளின் சிறகடிப்பில்
சிக்கிக்கொண்டு
என் இரு கண்களும் துண்டாகித்
துடிதுடிக்கிறது ! \\
ஆஹா..கவித கவித
/// இது நம்ம ஆளு said...
அண்ணா
அருமை. வருகைக்கு நன்றி . படியுங்கள்
ஜனனம் = ஜென்மம் ///
வருகைக்கு நன்றி ..... !! கண்டிப்பாக......
// கலாட்டா அம்மணி said...
\\உன் தண்ணீர்க் குடத்திற்குள்
நான் சிந்திய
கண்ணீர்க்குளங்கள் ! \\
\\இதோ !
உன் இமைகளின் சிறகடிப்பில்
சிக்கிக்கொண்டு
என் இரு கண்களும் துண்டாகித்
துடிதுடிக்கிறது ! \\
ஆஹா..கவித கவித //
ஆஹா.... நெம்ப தேங்க்ஸ்ங்கோ அம்முனி...!!! நெம்ப சந்தோசமுங்கோவ் .......
உன் தண்ணீர்க் குடத்திற்குள்
நான் சிந்திய
கண்ணீர்க்குளங்கள் !
அதில்
என் நினைவு மீன்கள்
படகுப் பாடையில் அல்லவா
நீந்திக் கொண்டிருக்கின்றன///
குடத்துக்குள் குளங்கள்---
நினைவு மீன்கள் படகுப்பாடையில்---
ரசனை அருமை!!
// thevanmayam said...
ரசனை அருமை!! //
ரொம்ப நன்றிங்க .......
//
உன்
நெற்றி வேர்வையில்
வெண்ணிலா தொட்டுச்
//
நல்ல ஆரம்பம் ம்ம்ம்ம் அந்த தேவதை எங்கே இருக்கிறாங்களோ??
//சின்னச் சிரிப்பொலியில்
வண்ணத்துப்பூச்சி பிடித்து
//
அருமை அருமை கவிதையின் நடை அழகு!!
//
கொஞ்சம்
குனிந்து பாரடி
உன் தண்ணீர்க் குடத்திற்குள்
நான் சிந்திய
கண்ணீர்க்குளங்கள் !
//
நல்ல உவமானம் இங்கே அரங்கேறி இருக்கின்றது!!
//
தேவதையே !
நம் காதலில் வளர்த்த
இந்த நந்தவனம்
கந்தகத் திரவத்தில் தான்
காலூன்ற வேண்டுமெனில்
//
கந்தகத் திரவம் நல்ல சொல்லாடல்
வரிக்கு வரி உங்கள் தேவதை,
சிரிக்கும் முத்துச் சிணுங்கல்கள்
எனது காதில் விழுகின்றது சகோதரா!
//
வாழையிலை போல்
கிழிந்துபோன
என் வாழ்க்கையும்
//
வேண்டாம் சோகம் சகோதரா.
//
இனி
எனக்குள்ளிருக்கும்
மன அறைகளில்
மரணவிழாவைத் தானே
கொண்டாட முடியும் .
//
வேண்டாம் வேண்டாம்.
மணவிழாவைக் கொண்டாடுவோம் சகோதரா!
//
இதுவரை
நம் உறவுப் பானையில்
ஊறிய ஞாபகப்பாகைப்
பிரிவுத் தீ தின்பதற்கா
தேக்கிவைத்தோம் ?
//
இல்லை இல்லை அப்படின்னு அவங்க சொன்னாங்க.
//
இதோ !
உன் இமைகளின் சிறகடிப்பில்
சிக்கிக்கொண்டு
என் இரு கண்களும் துண்டாகித்
துடிதுடிக்கிறது !
//
அருமையான உள்ளக் குமுறலின் வெளிப்பாடு!
//
முதலில்
இதன் வெப்ப வேதனைக்கு
மயிலிறகு விரல்களால்
மருந்து கொடு
கரைசேரட்டும்
//
சரி அவிங்க கிட்டே சொல்லிடலாம் :)
//
இல்லையெனில்
உன் தாழம்பூ மனதின்
சன்னல் திறந்துவை
//
இது நல்லா இருக்கு, இதையும் சொல்லிடலாம்!
கவிதை முழுவதும் மிகவும் நன்றாக இருந்தது சகோதரா!!
நன்றிங்கோவ் ....!!!!! வரிக்கு வரி பின்னி பெடலெடுத்துபோட்டீங்கோ ......!!!!!
இன்னொரு சந்தோசமான விசியம்....!!!! எனக்கு நவம்பர்ல கண்ணாலம் ...!!! பத்திரிக்க இன்னும் அச்ச்சடிக்குல .. அடுச்ச்துக்கு அப்புறம் கண்டிப்பா அனுப்புறேன்.... மறக்காம வந்துரோனும்....!!!! என்ட்ர வருங்கால அம்முனிய வெச்சுத்தான் இந்த கவிதைய எழுதுனேன்....!! என்ட்ர அம்முனி பேரும் இதுல இருக்கு ..... கண்டுபுடிங்க பாப்போம்......!!!!!
நல்ல கவிதை. தமிழ்ச் செல்விங்களா?
உங்கள் வருங்கால அம்முனியின் பெயரைக் கண்டு பிடித்து விட்டேன்
இது அந்த பெயர்........
தமிழ்ச் செல்வி!!
சரியா சொன்னேனா சகோதரா???
உங்கள் திருமண அழைப்பிதழுக்கு நன்றி!!
உங்கள் திருமணத்த்திற்கு எனதன்பு
Advance வாழ்த்துக்கள் சரியா ?????
// பாலா... said...
நல்ல கவிதை. தமிழ்ச் செல்விங்களா? //
ஆஹா.... !! ஆமாங்க... அவுங்க பேரு தமிழ்ச் செல்வி ...!!
வருகைக்கு நன்றிங்க........
// RAMYA said...
உங்கள் வருங்கால அம்முனியின் பெயரைக் கண்டு பிடித்து விட்டேன்
இது அந்த பெயர்........
தமிழ்ச் செல்வி!!
சரியா சொன்னேனா சகோதரா???
உங்கள் திருமண அழைப்பிதழுக்கு நன்றி!!
உங்கள் திருமணத்த்திற்கு எனதன்பு
Advance வாழ்த்துக்கள் சரியா ????? //
அருமை....!! கண்டுபுடுச்சுட்டீங்களே...... !!!
ரொம்ப நன்றிங்க சகோதரி......!!!
என்ன பண்ணுறது... என்ன விட அதிகமா படுசுட்டாங்க ........
நான் வெறும் B.E மட்டும்தான்....
ஆனா அவுங்க M.Com , M.Phil , B.Ed , இப்போ M.B.A final year .....
என்ன கொடும சகோதரி இது ......
அடேய் உண்மைய சொல்லு இந்த கவிதைய எங்க சுட்ட
// அவுங்க பேரு தமிழ்ச் செல்வி ...!! //
நல்ல மரியாதை keep it up
// ஆனா அவுங்க M.Com , M.Phil , B.Ed , இப்போ M.B.A final year .....//
இதையே இன்னும் எத்தன பேருகிட்ட சொல்லுவனு தெரியலையே
@ கார்த்திக் ,
உங்கள் முதல் வருகைக்கும் , நல் இடுகைக்கும் மிக்க நன்றி கார்த்திக்.......
நவம்பர்ல கல்யாணத்தை வச்சிகிட்டு உங்களுக்கு லவ்வு கேட்குதா?
@ வால் பையன் ,
என்ன பண்ணுவது......
கைதாவது முன்பே கவி பாட வேண்டிய கட்டாயம் எனக்கு.......!!
உங்கள் இடுகைக்கு என் நன்றி....
கொஞ்சம் வேளை இருந்தது அதான் வர முடியவில்லை தலைவா அருமை
Post a Comment