லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Monday, October 19, 2009

தீபாவளி தீர்த்த யாத்திரை ...

எங்கூரு ஈரோடுக்கு பக்கத்தால இருக்குற மூலப்பாளையமுங்கோ.... !! வருசா வருசம் தீபாவளிக்கு தீர்த்த யாத்திரை போறது எங்கூரு எளசுங்குளுக்கு ஒரு கிளுகிளுப்புங்கோ....!! அது மாதிரியே இந்த வருசமும் தீபாவளிக்கு மேட்டூருக்கு தீர்த்த யாத்திரை போனாங்கோ .... !! அந்த போட்டோவெல்லாம் இந்த பதிவுல போட்டுருக்குறேனுங்கோ....!! பாப்பீங்களோ... இல்ல பாக்க மாட்டீங்களோ..... ஆனா பின்னூட்டத்த மட்டும் போட்டுட்டு போயிருங்கோவ் .....!!
SINCE - 1947


தீர்த்த யாத்திரைக்கு தயாராக நிற்கும் மும்மூர்த்தி வாகனங்கள்.....பட்டாசு வெடிக்குற அழகப் பாருங்க ...!! பக்கி... எங்க வெச்சு வெக்குது பாருங்க....??


ஈரோட்டிலிருந்து மேட்டூர் செல்லு சாலை .......


செல்லும் வழியில் உள்ள மலைகளின் அழகு ........

ரோமியோ நிர்மல்..... ரோமியோ ராஜ்....
இவுருதான் எங்கூரு சீமை மாதவன் ...!! இவுரு ஸ்டைலே அபாரம்....!!மாதவனின் மறைவுப் புன்னகை....!! உள்ளே மப்பும் மந்தாரமுமாக சரவணன்...!!


வீரப்பன் நினைவிடம் - மேட்டூர் .

16 கண்மாய் மதகு...23,000 கன அடி நீர் வெளியேறும் காவிரியின் அழகு....இவுருதான் எங்க டீமுக்கே மாம்ஸ்...... !! மொதல்ல ஆட்டோ ஓட்டி கத்துக்கிட்டாரு ... இப்போ காரு ஓட்டி பழகீட்டாரு .... !!!

நிர்மல் மற்றும் பரமேஸ்....... !! வலது ஓரத்துல செல்போன்ல மொக்க போட்டுக்கிட்டு ஒக்காந்திருக்குராரே .... அவுரு யாருன்னு தெரியுதா..... !! தி கிரேட் க்ளோபல் அம்பானி " கார்த்திக் " .....!! 24 மணி நேரமும் யு.எஸ் பிச்னச்ஸ் டீலிங்லதான் இருப்பாரு.... தலைவரு அவ்ளோ பிசி...!! அவரோட லிங்க்.....

http://www.flickr.com/photos/karthikero/


சோம பானம் சேகரிக்கப்படிக்கிறது ....


தீர்த்த விழா துவங்குகிறது.... !! இந்த ஆளுதான் எங்க கேங்குலையே இருக்குற ஒரே காமெடி பீசு ...!!
இவுருதான் ... எங்க டி.சி.எஸ் புயல் ... ரொம்ப வருஷமா அங்க குப்ப கொட்டிகிட்டு இருக்குறாரு.... !! பேரு... டெரர் . ராஜேந்திரன் ....!!!
இவுரு அவரோட தம்பி ரோமியோ . ராஜ் ......!!
இப்புடி இருந்த பாலத்த ....

மப்புல இப்புடி ஆக்கீட்டாரு இந்த அழகு சுந்தரம்...!! ஓ..... இவுரு யாருன்னு நா சொல்லவே இல்லையே....!! இவுருதான் எங்க ஊரு அழகு சுந்தரம். லோகு சங்கர். ..!
மூலப்பாளையம் டெரர் கேங்.....!!
டிஸ்கி : தயவு செய்து இதுல லவ்டேல் மேடிய தேடாதீங்க....!! பாவம் அவுரு...!! உட்-பி யோட தொல்ல தாங்க முடியாம ... தீபாவளி புது படம் " ஆதவன் " க்கு போயி நொந்து நூடுல்ஸ் ஆயிட்டாரு....!! அவருக்கு ஒரு ஆழ்ந்த அனுதாபங்கள் மட்டும் சொல்லீருங்க...!!

17 comments:

ஈ ரா said...

// தீர்த்த யாத்திரைக்கு தயாராக நிற்கும் மும்மூர்த்தி வாகனங்கள்

சோம பானம் சேகரிக்கப்படிக்கிறது .... //

இதான் உம்ம தீர்த்த யாத்திரையா?

//வீரப்பன் நினைவிடம்...//

செத்துப்போன யானைகளுக்கு நினைவிடம் இல்லையா?

பாலம் படம் சூப்பர்...

அது சரி... உம்ம யாத்திரை நம்ம பக்கம் வராதா?

வால்பையன் said...

சரக்கடிக்க மேட்டூர் போனிங்களா!?

அதுக்கு தீர்த்த யாத்திரைன்னு பேர் வேற!
எங்க பாஸ் போட்டோ வேற இல்லையா!?

க.பாலாசி said...

போட்டோவெல்லாம் நல்லாருக்கு நண்பரே...நானும் நீங்க எங்கயாவது இருப்பீங்கன்னு பார்த்தேன். கடைசியாதான் தெரியுது நீங்க இல்லன்னு.. சரி விடுங்க...

//டிஸ்கி : தயவு செய்து இதுல லவ்டேல் மேடிய தேடாதீங்க....!! பாவம் அவுரு...!! உட்-பி யோட தொல்ல தாங்க முடியாம ... தீபாவளி புது படம் " ஆதவன் " க்கு போயி நொந்து நூடுல்ஸ் ஆயிட்டாரு....!! அவருக்கு ஒரு ஆழ்ந்த அனுதாபங்கள் மட்டும் சொல்லீருங்க...!!//

இதுக்குத்தான் நிச்சயம் பண்ணி கல்யாணம் பண்ணக்கூடாதுங்கறது.

டேக் இட் ஈசி........கூல் மாமு....

அகல் விளக்கு said...

யாருப்பா எங்க சிங்கத்த காமெடி பீஸுன்றது?????????????

நேசமித்ரன் said...

நல்ல பகிர்வு தலைவரே நல்ல கேங்குதான்
ஆதவன் க்கு அனுதாபங்கள்

ஹேமா said...

அச்சோ..இவ்ளோ பேரா.அதென்ன கறுப்பு வெள்ளைப் படம் !மேடி,உங்களைத் தேடிக் களைச்சே போனேன்.ராஜேந்திரன்னு சொன்னவர் அப்பிடியே அசத்தல் அவர் நடை.

கலகலப்ரியா said...

oorla ullavanga pic ellaam poattu.. unga face a treasure chest la vachchu poottitteengale maddy...!

கும்க்கி said...

மேடி.,
படங்களும் கமெண்ட்டும் ஜூப்பர்..

வருங்கால அம்பானி போட்டோ போட்டதற்க்கு ரொம்ப நன்றி.
அப்படியே எங்க மொதளாலி அம்பானிய சம்சார சாகரத்துல தொபுக்கடீர்னு துக்கி போட ஏற்பாடு பண்ணப்படாதா?

கும்க்கி said...

அப்புறம் அந்த ரோமியோ நிர்மல்தான் நாடோடிகள் படத்துல நடிச்சவரா?
என்ன கேரெக்டர்னு உங்களுக்கே தெரியும்..

மகேஷ் said...

நீங்க பேசாம மேட்டூருக்கே போயிருந்துக்கலாம்..

- இரவீ - said...

தண்ணிக்கு நடுவுல தண்ணியா ??? சூப்பரப்பு.தண்ணிக்கு நடுவுல தண்ணியா ??? சூப்பரப்பு.

பட்டிக்காட்டான்.. said...

அட உங்க குரூப்பு மேட்டூரு போனாங்களா(நீங்க பாவம்..!)..?
நாங்க கொடிவேரி போனோம்..

லவ்டேல் மேடி said...

@ ஈ ரா ,// இதான் உம்ம தீர்த்த யாத்திரையா? //

ஆஆவ்வ்வ்வ்... ஆம்மாங்கோவ்.....!!// செத்துப்போன யானைகளுக்கு நினைவிடம் இல்லையா? //

அதுக்கு எங்க போயிங்க நினைவிடம் வெக்கறது ... !! அது செத்துப்போன மறு நிமிஷமே பார்ட் ... பார்ட்டா .. வித்துபுடுறாங்க ... அப்புறம் எங்க போய் பொதைக்குறது...!!//பாலம் படம் சூப்பர்...//

நன்றிங்க ...
// அது சரி... உம்ம யாத்திரை நம்ம பக்கம் வராதா? //

அது எங்க .....???

லவ்டேல் மேடி said...

@ வால்பையன் ,

// எங்க பாஸ் போட்டோ வேற இல்லையா!? //

ஊ நீங்களே சரக்குல இருக்குறீங்க போல ... உங்க பாஸ் போட்டோ இல்லாம பதிவா... !! அப்புறம் அது மொதலாளி குத்தமாயிரும்...!!

@ க.பாலாசி ,

ஹ... ஹ... ஹா... ! நம்ம கத ... சோக கத....!! நன்றி பாலாஜி.....!!
@ அகல் விளக்கு ,

அட .. நம்ம ஊரு புது தோழர்... !!@ நேசமித்ரன் ,

நன்றிங்க தோழரே.... ஆஅவ்வ்வ்வ்.....!!


@ ஹேமா ,

அட.. நம்ம கதைதான் டிஸ்கி இல போட்டுருக்கேனே...!! ரொம்ப நன்றிங்க...@ கலகலப்ரியா ,

டிஸ்கிய படிங்க தொழியாரே .... ! அஆவ்வ்வ்......@ கும்க்கி ,

ஆமாங்க தோழரே.... !! ரொம்ப நன்றிங்க....


@ மகேஷ் ,

நல்லா சொன்னடா மாப்ள.... !!@ இரவீ ,

ஆஹாஆஆ.....!! நீங்களும் கொஞ்சம் ஸ்டெடிதான் போல...!! சொன்னதையே திரும்ப சொல்லீருக்கீங்க..... !!
@ பட்டிக்காட்டான்.. ,

அட... அதுவும் நல்ல ஏரியாதான்...!! தீர்த்த யாத்திரை எங்க போனா என்ன ...... கான்சப்ட் ஒன்னுதான.....!!

cheena (சீனா) said...

அன்பின் லவ்டேல்மேடி

கல்யாணத்துக்கு முன்னாடி போயிருக்க வேணாமா - தீர்த்த யாத்ரை எல்லாம் - அப்புறம் எங்கே ??? ம்ம்ம்ம்

நல்லாருக்கு படங்கள் எல்லாம்

அப்புறம் நம்ம அம்பானி படம் சூப்பர் - செல்லிலே யாரோட கடலயாம் - அவர்க்கும் ஒரு உட்பீ பாருங்கப்பா - நல்லாருங்கப்பா

நல்வாழ்த்துகள்

லவ்டேல் மேடி said...

@ சீனா ,

மிக்க நன்றிங்க தோழரே....

வி.என்.தங்கமணி, said...

பிக்னிக் ரொம்ப ஜாலியா
இருக்குப்பா. பார்ப்பம் நாளைக்கு
நன்றி, வாழ்க வளமுடன்.