லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Monday, October 12, 2009

வசந்தமே...




வசந்தமே...
உன் இரு விழிகளும்
உளிவைத்து உடைத்தன
என் மனதை!

எனக்குள்
அறுந்து விழுந்துகொண்டிருந்த
ஆயுளின் கொழுந்துகளை...
தூதுவந்த தூண்டில்
கொள்ளையடித்துச் சென்று
உன் நெற்றி தொட்ட
நிலாப் பொட்டில்
புதைத்த பிறகும்
உதட்டுப் பூவுக்குள்
உள்மனசை மூடுகின்றாயே நீ...
காம்பு கிள்ளிய
வெற்றிலையாய்த் தவிக்கிறது
நெஞ்சம்!

நான் காதல் தீவில்
இறங்கியதும்
இந்த மெல்லிய இதயம்
கல்லறையானது மெய்

எனினும்
நீ கற்றுத்தந்த கவிதைகள்
என்னைக் கரைசேர்த்துவிட்டன!

உயிருக்குச் சிறை
உள்ளத்திற்குச் சிறகு
இதுதானே
காதலின் வடிவம் ...

உன்னை அடைவதற்கு
ஊற்றாய்ப் புறப்பட்டு
கீற்றாய்க் கிழிந்து
திரும்பினாலும்

கடைசியில் நீ சுமந்து வந்த
அந்த மெளனக் குடத்தை
முதல் பரிசாய்
என் உயிரில் இறக்கிவைத்தாய்..

அன்று முதல்தான் என்
எழுதுகோலும் அடைமழையாய்
அழ ஆரம்பித்தது...

இயற்கையும்
எனக்கு
இன்னொரு இதயமாயிற்று....!!


27 comments:

ராமலக்ஷ்மி said...

//எனினும்
நீ கற்றுத்தந்த கவிதைகள்
என்னைக் கரைசேர்த்துவிட்டன!//

வாழ்வில் எவரையும் எந்த சூழலிலும் கவிதைகள் கரை சேர்க்கும். லவ்லி மேடி!

க.பாலாசி said...

//ஆயுளின் கொழுந்துகளை...
தூதுவந்த தூண்டில்
கொள்ளையடித்துச் சென்று
உன் நெற்றி தொட்ட
நிலாப் பொட்டில்
புதைத்த பிறகும்//

மிக ரசனையான வரிகள்...

//காம்பு கிள்ளிய
வெற்றிலையாய்த் தவிக்கிறது
நெஞ்சம்!//

ஆகா.....ம் அப்பறம்....

//நான் காதல் தீவில்
இறங்கியதும்
இந்த மெல்லிய இதயம்
கல்லறையானது மெய்//

ஓ.கோ....

//எனினும்
நீ கற்றுத்தந்த கவிதைகள்
என்னைக் கரைசேர்த்துவிட்டன!//

பார்ரா.........இது எப்பயிலேர்ந்து....

//உன்னை அடைவதற்கு
ஊற்றாய்ப் புறப்பட்டு
கீற்றாய்க் கிழிந்து
திரும்பினாலும்
கடைசியில் நீ சுமந்து வந்த
அந்த மெளனக் குடத்தை
முதல் பரிசாய்
என் உயிரில் இறக்கிவைத்தாய்..//

சூப்பர்.....

//அன்று முதல்தான் என்
எழுதுகோலும் அடைமழையாய்
அழ ஆரம்பித்தது...//

கவிதையை பார்த்தாலே தெரியுதே.....

கவிதை அழகு...நண்பரே.....

கலகலப்ரியா said...

superb maddy.. kalakkals..!

vasu balaji said...

/கடைசியில் நீ சுமந்து வந்த
அந்த மெளனக் குடத்தை
முதல் பரிசாய்
என் உயிரில் இறக்கிவைத்தாய்..

அன்று முதல்தான் என்
எழுதுகோலும் அடைமழையாய்
அழ ஆரம்பித்தது...
/

வார்த்தை இல்லை மேடி பாராட்ட. அற்புதம்.

ஈ ரா said...

//உயிருக்குச் சிறை
உள்ளத்திற்குச் சிறகு
இதுதானே
காதலின் வடிவம் ...//

அருமை..

நேசமித்ரன் said...

கலக்குறீங்க பாஸு
காம்பு கிள்ளி அனுப்புகிறீர்கள் மனசையும்

KARTHIK said...

// இயற்கையும்
எனக்கு
இன்னொரு இதயமாயிற்று....!! //

முடியல
ஒரு இதயம் தமிழுக்கு
இன்னொரு இதயம்
ஆங்கிலத்துக்கா ?

(அய் மீ நம்ம ர காலனி ஆங்லோஇந்திய பெண்மனிக்கா)

நட்புடன் ஜமால் said...

உயிருக்குச் சிறை
உள்ளத்திற்குச் சிறகு
இதுதானே
காதலின் வடிவம் ...]]

அருமை அருமை.

ஹேமா said...

மேடி,கவிதை முழுதுமே வரிகள் அழகாய் வீச்சோடு அமைந்திருக்கிறது.இயற்கைகூட எமக்கு இதம்தான்.

RAMYA said...

//
வசந்தமே...
உன் இரு விழிகளும்
உளிவைத்து உடைத்தன
என் மனதை
//

அப்பா வார்த்தைகளின் ஆளுமை அபாரம்!

தமிழ் அமுதன் said...

ஆகா ...! அசத்தல் ...!

RAMYA said...

//
காம்பு கிள்ளிய
வெற்றிலையாய்த் தவிக்கிறது
நெஞ்சம்!
//

என்ன சொல்றதுன்னே தெரியல
வரிகளின் அலங்காரம் ஆளுமை
செகிறது சகோ!

RAMYA said...

//
எனினும்
நீ கற்றுத்தந்த கவிதைகள்
என்னைக் கரைசேர்த்துவிட்டன!
//

கரை சேர்ப்பது என்பது பெரும் விஷயம் தம்பி:)

RAMYA said...

//
உன்னை அடைவதற்கு
ஊற்றாய்ப் புறப்பட்டு
கீற்றாய்க் கிழிந்து
திரும்பினாலும்
//

அது சரி :))

RAMYA said...

//
கடைசியில் நீ சுமந்து வந்த
அந்த மெளனக் குடத்தை
முதல் பரிசாய்
என் உயிரில் இறக்கிவைத்தாய்..
//

ம்ம்ம் சரி போன் போட்டு சொல்றேன்...

RAMYA said...

//
அன்று முதல்தான் என்
எழுதுகோலும் அடைமழையாய்
அழ ஆரம்பித்தது...
//

அப்போ இங்க போடலையா :))

RAMYA said...

//
இயற்கையும்
எனக்கு
இன்னொரு இதயமாயிற்று....!!
//

சூப்பர்ஆ சைன்ஆப் பண்ணி இருக்கீங்க!

வால்பையன் said...

அட அட அட!

அரேஞ்ச்டு மேரேஜாக இருந்தாலும் காதலித்து தான் கல்யாணம் பண்ணுவேன் என்று ஒற்றை காலில் நிற்கும் உங்களை எப்படி பாராட்டுவது!

Unknown said...

@ ராமலக்ஷ்மி சகோதரி ,

ரொம்ப நன்றிங்க சகோதரி.......




@ க.பாலாஜி ,

வரிக்கு வரி லந்தா....?? ரொம்ப நன்றிங்க தம்பி.....





@ கலகலப்ரியா சகோதரி,

ரொம்ப நன்றிங்க சகோதரி.......





@ வானம்பாடிகள் ,

ரொம்ப நன்றிங்க தோழரே ......





@ ஈ ரா ,

ரொம்ப நன்றிங்க தோழரே ......





@ நேசமித்ரன் ,

ஹ.. ஹ.. ஹா... ரொம்ப நன்றிங்க தல ......





@ கார்த்திக் மொதலாளி ,

ரொம்ப நன்றிங்க மொதலாளி...

// அய் மீ நம்ம ர காலனி ஆங்லோஇந்திய பெண்மனிக்கா) //

அட பாவிகளா... அருளானும் நீயும் அத ஓட்டீட்டு... என்ன கோர்த்துடுரியா ..?






@ நட்புடன் ஜமால் ,

ரொம்ப நன்றிங்க தோழரே ......





@ ஹேமா சகோதரி,

ரொம்ப நன்றிங்க சகோதரி...





@ ஜீவன் கேப்டன்ஜி ,

ரொம்ப நன்றிங்க கேப்டன்ஜி.......





@ ரம்யா சகோதரி ,

ஆஹா... வரிக்கு வரி பாராட்டு மழை .....

( டிஸ்கி : இதுல ஏதும் உள்குத்து இல்லியே.. அஆவ்வ்வ் )





@ வால்பையன் பாஸ் ,

ரொம்ப நன்றிங்க பாஸ்....

மகேஷ் : ரசிகன் said...

மாம்ஸ், எனக்கு அழுவாச்சியா அழுவாச்சியா வருது.
காதல், காதல்... ஆ ஆ ஆ... அபிராமி அபிராமி...

நல்லாயிருக்குங் பன்னாடி

நசரேயன் said...

//அன்று முதல்தான் என்
எழுதுகோலும் அடைமழையாய்
அழ ஆரம்பித்தது..//

ஏன் பேனாவிலே மை தீர்ந்து போச்சா?

Unknown said...

@ மகேஷ் ,

// மாம்ஸ், எனக்கு அழுவாச்சியா அழுவாச்சியா வருது. //

சரி.... சரி... அடுத்த தடவ வரும்போது குச்சி முட்டாயும் ... குருவி ரொட்டியும் வாங்கிட்டு வாறன்.... அழுவாத.. அழுவாத....


// காதல், காதல்... ஆ ஆ ஆ... அபிராமி அபிராமி... ///


அட பாவி.... குடும்பத்துல கொழப்பத்த உண்டு பன்னீருவியாட்டோ....!!
மகா பதிவர்களே..... சத்தியமா சொல்லுறேன்... எனக்கு இந்த அபிராமிய யாருனே தெரியாது...!!




@ நசரேயன் ,

// ஏன் பேனாவிலே மை தீர்ந்து போச்சா? //


அட.... உங்குளுக்கு கூர்நோக்குத்திரன் நெம்ப ஜாஸ்திங்கோ தலைவரே....

நேசமித்ரன் said...

தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

Unknown said...

@ நேசமித்ரன் ,

நன்றிங்க தோழரே... !! உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....!!

cheena (சீனா) said...

அன்பின் மேடி

காதல் கவிதை அருமை - உவமைகளும் அருமை - கல்யாணத்திற்கு முன் கவிதை எழுதி ஒத்திகையா - பாராட்டுகள்

நல்வாழ்த்துகள்

யாரந்த ரகாஆஇபெண்மணி

வுட்பீ பிளாக் பாப்பாங்களா

Unknown said...

@ சீனா ,

மிக்க நன்றிங்க தோழரே....

விஜயகுமார் said...

திரு. லவ்டேல் மேடி அவர்களே..
தயவு செய்து மற்றவரின் கவிதை நூலில் இருந்து
கவிதைகளை எடுத்து பதிவு செய்யவேண்டாம்.
இந்த கவிதை அனைத்தும் கவிஞர் திரு.மணிவசந்தம்
என்பவர் “ மின்னல் கொடிகள்” என்ற கவிதை நூலில்
2003 ஆண்டு வெளியிடப்பட்டது..
இந்த புத்தகத்திற்கு திரு.அறிவுமதி (திரைப்பட பாடலாசிரியர்) அனிந்துரை எழுதி உள்ளார்.
மற்றவரின் பாராட்டை பெற உங்கள் திறமையை வெளிப்ப்டுத்துங்கள்..