லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Thursday, August 27, 2009

நிச்சயதார்த்தம் ...வானவில்லே ...!
சுகம்தானா...?

நம் இருவருக்கும் இடையில்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
உள்ள இடைவெளி...
எனினும்
இரவு பகல்போல்
நமது உள்ளங்கள்
இணைந்து உறவாடும்...

கண்ணே...!
மல்லிகைப் பூக்களை
மனதிலிருந்து
அள்ளித்தெளிக்கும்
அந்த அழகுச் சிரிப்பு...

மண்பரப்பில்
விண்மீன்களை
வரைந்து செல்லும்
உன் பாதச்சுவடுகள்...

கடைக்கண் சிமிட்டலில்
நீ எழுதி நீட்டிய
கவிதை மொட்டுக்கள்...

மொத்தத்தில்
வீழ்ந்தேனே நான்...!
திரி நான்
தீபம் நீ
இது மட்டும்
என்றும் அணையாத
நிரந்தரம்...!

சித்திரமே...!
திருவோணத் திருநாளில்
நம் நிச்சயதார்த்தம்...

ஆனால் அது
சொர்கத்தில்
நிச்சயக்கபடபோவதில்லை...

உன்
உதட்டோர மெளனப்
புன்சிரிப்பில்
நிச்சயக்கப்படப்போகிறது...!!

39 comments:

அ.மு.செய்யது said...

அண்ணே !!! உங்களுக்கு நிச்சயதார்த்தமா ?? சொல்லவேயில்ல..

எப்ப கல்யாணம் ??

//மண்பரப்பில்
விண்மீன்களை
வரைந்து செல்லும்
உன் பாதச்சுவடுகள்...//

நெம்ப‌ ந‌ல்லாருக்குதுங்...க‌விதை அருமை !!!

திரும‌ண‌ வாழ்த்துக‌ள் !!

நட்புடன் ஜமால் said...

ஹலோ போட்டோஸ் நிஜ அப்டேட்டா

என்னா மேடி

வாழ்த்துகள்.

நட்புடன் ஜமால் said...

உன்
உதட்டோர மெளனப்
புன்சிரிப்பில்
நிச்சயக்கப்படப்போகிறது...!!]]


அண்ணா சூப்பருங்கண்ணா

கார்த்திக் said...

// உன்
உதட்டோர மெளனப்
புன்சிரிப்பில்
நிச்சயக்கப்படப்போகிறது...!!//

டேய் நீதானா இது
நம்பவே முடியல
அட்டகாசம் போ :-))
வாழ்துக்கள்.

வானம்பாடிகள் said...

நாளன்னைக்கு நிச்சயதார்த்தமா? வாழ்த்துக்கள் மேடி.
/உதட்டோர மெளனப்
புன்சிரிப்பில்
நிச்சயக்கப்படப்போகிறது...!!/

இதுலயே தெரியுது இது

/மொத்தத்தில்
வீழ்ந்தேனே நான்...!/

கவிதை அருமை.

Ammu Madhu said...

//சித்திரமே...!
திருவோணத் திருநாளில்
நம் நிச்சயதார்த்தம்...

ஆனால் அது
சொர்கத்தில்
நிச்சயக்கபடபோவதில்லை...

உன்
உதட்டோர மெளனப்
புன்சிரிப்பில்
நிச்சயக்கப்படப்போகிறது...!!//

ஆஆஆஆஆ........சூப்பர்ரா எழுதறீங்க..இந்த வரிக ரொம்ப புடிச்சுசு..

அன்புடன்,
அம்மு.

க.பாலாஜி said...

//ஆனால் அது
சொர்கத்தில்
நிச்சயக்கபடபோவதில்லை...
உன்
உதட்டோர மெளனப்
புன்சிரிப்பில்
நிச்சயக்கப்படப்போகிறது...!!//

நைனா...கடைசியில இப்டி கவுந்திட்டியே நைனா...

இப்டி கவிதல்லாம் தாறுமாற கௌம்புது...சும்மா பட்டய கிளப்புறீங்களே...

வாழ்த்துக்கள் அன்பரே....

jaisankar jaganathan said...

16 புள்ள பெத்து பெரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள்

RAMYA said...

நிச்சயதார்த்ததிற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!

RAMYA said...

//
சித்திரமே...!
திருவோணத் திருநாளில்
நம் நிச்சயதார்த்தம்...
//

ஒ அப்படியா???? :-)

RAMYA said...

//
உன்
உதட்டோர மெளனப்
புன்சிரிப்பில்
நிச்சயக்கப்படப்போகிறது...!!
//

இது சூப்பர் வரிகள்
ம்ம்ம் நல்லா எழுதி இருக்கீங்க :-)

ஜீவன் said...

அருமை! வாழ்த்துக்கள் !!!

லவ்டேல் மேடி said...

@ அ.மு.செய்யது ,


// அண்ணே !!! உங்களுக்கு நிச்சயதார்த்தமா ?? சொல்லவேயில்ல.. //

இப்போ சொல்லீட்டேனே....


// எப்ப கல்யாணம் ?? //

நவம்பர் 26 , 27 . உங்களையெல்லாம் அழைக்காமலா ....?// நெம்ப‌ ந‌ல்லாருக்குதுங்...க‌விதை அருமை !!! திரும‌ண‌ வாழ்த்துக‌ள் !! //


நெம்ப தேங்க்ஸ்ங்க தம்பிங்கோவ்........!!

லவ்டேல் மேடி said...

@ நட்புடன் ஜமால் ,

// ஹலோ போட்டோஸ் நிஜ அப்டேட்டா //

இல்லேங்க....

// வாழ்த்துகள். //

ரொம்ப நன்றிங்க

// அண்ணா சூப்பருங்கண்ணா //

நன்றிங்கண்ணோவ்....!!

லவ்டேல் மேடி said...

@ கார்த்திக் ,


// டேய் நீதானா இது
நம்பவே முடியல //

உண்மை சில நேரம் நம்ப முடியாமல் இருக்குமுங்க மொதலாளி ....!!

// அட்டகாசம் போ :-))
வாழ்துக்கள். //

நெம்ப தேங்க்ஸ்ங்கோ மொதலாளி .....

லவ்டேல் மேடி said...

@ வானம்பாடிகள் said...

// நாளன்னைக்கு நிச்சயதார்த்தமா? வாழ்த்துக்கள் மேடி. //

ஆமாங்க தோழரே...


// இதுலயே தெரியுது இது //

ஆஆவ்வ்வ்வ்.....!!// கவிதை அருமை. //

நன்றிங்க தோழரே.....!!

லவ்டேல் மேடி said...

@ Ammu Madhu ,

// ஆஆஆஆஆ........சூப்பர்ரா எழுதறீங்க..இந்த வரிக ரொம்ப புடிச்சுசு.. //

ரொம்ப நன்றிங்க சகோதரி....!!


// அன்புடன்,
அம்மு. //


அன்புடன் ,
மேடி ...

லவ்டேல் மேடி said...

@ க.பாலாஜி

// நைனா...கடைசியில இப்டி கவுந்திட்டியே நைனா...
இப்டி கவிதல்லாம் தாறுமாற கௌம்புது...சும்மா பட்டய கிளப்புறீங்களே...
வாழ்த்துக்கள் அன்பரே.... //

ரொம்ப தேங்க்ஸ் தம்பி ....!!

SanjaiGandhi said...

வாழ்த்துகள் தலீவா.. பக்கத்துல தானே கல்யாணம். சாப்பாட்டுக்கு வந்துடறென். :)

லவ்டேல் மேடி said...

@ jaisankar jaganathan ,

// 16 புள்ள பெத்து பெரு வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.. //

ஆஹா... ரொம்ப பெரிய வாழ்த்து போல தெரியுது...!! நன்றிங்க தோழரே... !!

லவ்டேல் மேடி said...

@ RAMYA

ரொம்ப நன்றிங்க அக்கா.....


@ ஜீவன் ,

ரொம்ப நன்றிங்க கேப்டன்ஜி .....
@ anjaiGandhi ,

கண்டிப்பா... உங்களையெல்லாம் கூப்புடாமலா .....!! ரொம்ப நன்றிங்க தோழரே... !!

Ravee (இரவீ ) said...

அட்வான்ஸ் திரும‌ண‌ வாழ்த்துக‌ள் !!!

வால்பையன் said...

வாழ்த்துக்கள்!

புது பொண்ணுகிட்ட மொக்கை போட்டு கொல்லாதிங்க பாவம்!

ஊர்சுற்றி said...

வாழ்த்துக்கள் மேடி...

@வால்பையன்,
//
வாழ்த்துக்கள்!

புது பொண்ணுகிட்ட மொக்கை போட்டு கொல்லாதிங்க பாவம்!//

ஹிஹிஹி.... ஆ ஆங்க!

பட்டிக்காட்டான்.. said...

கவித.! கவித..!!

வாழ்த்துகள்..

ஹேமா said...

மேடி,விஷேசம் சொல்லாமலே கவிதையில சொல்றீங்களா !

கவிதையும் படங்களும் அழகு.

லவ்டேல் மேடி said...

@ Ravee (இரவீ ) ,

ரொம்ப நன்றிங்க தோழரே...!! இப்புடி சொல்லி தப்பிக்க முடியாது .... கல்யாணத்துக்கு அவசியம் வரணும்... அழைப்பிதல் அனுப்புவேன்...!!

@ வால்பையன் ,

// வாழ்த்துக்கள்! //

ரொம்ப நன்றிங்க பாஸ்..


// புது பொண்ணுகிட்ட மொக்கை போட்டு கொல்லாதிங்க பாவம்! //


அட ஆமால்ல..... சரி ... சரி......
@ ஊர்சுற்றி ,

வால் பையனோட கூட்டணியா.... !! ம்ம்...ம்ம்...


வாழ்த்துக்களுக்கு நன்றிங்க தோழரே....
@ பட்டிக்காட்டான்..,

ரொம்ப நன்றிங்க தோழரே .... கல்யாணத்துக்கு அவசியம் வரணும்....
@ ஹேமா ,

ரொம்ப நன்றிங்க ...... கல்யாணத்துக்கு அவசியம் வரணும்.... அழைப்பிதல் அனுப்புறேன்....!!

திகழ் said...

வாழ்த்துகள்

கலையரசன் said...

நிச்சயதார்த்த வாழ்த்து:

எங்கோ பிறந்த, எங்கோ வளர்ந்த
எங்கோ திரிந்த இருபேர்கள்
இங்கே இவ் வாழ்வில் இணைவார்கள் என்றே
இருபக்கம் பேசி முடிவாகி
மங்காதவாறு பலபேர்கள் முன்பு
மகிழ்வாகக் கூடிப் பதிவார்கள்
தங்கோலப் பாட்டில் தமிழ்மாறன் இங்கே
தகவாகப் பாடல் தருவாரே!

வாழ்துக்களுடன்...
கலையரசன்

லவ்டேல் மேடி said...

@ திகழ் ,

ரொம்ப நன்றிங்க ..
@ கலையரசன் ,

ஆஹா... அருமை... அருமை..!! அழகான வாழ்த்துக் கவிதை...!!

ரொம்ப நன்றிங்க தோழரே .....

கலகலப்ரியா said...

aahaa.. superu..! all the best maddy..!

லவ்டேல் மேடி said...

@ கலகலப்ரியா ,

ரொம்ப நன்றிங்க சகோதரி ...!

Anonymous said...

அழகான வாழ்த்துக் கவிதை...!!

லவ்டேல் மேடி said...

@ கடையம் ஆனந்த் ,

ரொம்ப நன்றிங்க தோழரே....

ஈ ரா said...

வாழ்த்துக்கள்....

லவ்டேல் மேடி said...

@ ஈ ரா ,

ரொம்ப நன்றிங்க தோழரே.....

cheena (சீனா) said...

அன்பின் மேடி

நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்திருக்கும்

//உன்
உதட்டோர மெளனப்
புன்சிரிப்பில்
நிச்சயக்கப்படப்போகிறது...!!//

அருமை அருமை

திருமணத்தில் இணையும் இருமனங்கள் சிறப்புடன் வாழ நல்வாழ்த்துகள்

லவ்டேல் மேடி said...

@ சீனா ,

மிக்க நன்றிங்க தோழரே....

விஜயகுமார் said...

திரு. லவ்டேல் மேடி அவர்களே..
தயவு செய்து மற்றவரின் கவிதை நூலில் இருந்து
கவிதைகளை எடுத்து பதிவு செய்யவேண்டாம்.
இந்த கவிதை அனைத்தும் கவிஞர் திரு.மணிவசந்தம்
என்பவர் “ மின்னல் கொடிகள்” என்ற கவிதை நூலில்
2003 ஆண்டு வெளியிடப்பட்டது..
இந்த புத்தகத்திற்கு திரு.அறிவுமதி (திரைப்பட பாடலாசிரியர்) அனிந்துரை எழுதி உள்ளார்.
மற்றவரின் பாராட்டை பெற உங்கள் திறமையை வெளிப்ப்டுத்துங்கள்..