லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Wednesday, August 12, 2009

சுவாசமே.....




சுவாசமே.....


காம்பிழந்த தாமரையொன்று
நம் காதல் கூட்டிலிருந்து
கண்ணீர்த் தேனெடுத்து
நின்றாலும்

நான் வரைகின்ற
கவிதைகளுக்கு
உன் பெயர்ப்பூ தானே
தாயப்பாலூட்டியது

எனவே
நீ வசித்துச் சென்ற வாசலை
ஆகாயமாக்கிக் கொண்டு

என் ஒவ்வொரு
சுவாசங்களுக்கிடையிலும்
உன்னை
எழுதிக் கொண்டேயிருப்பேன்....!

34 comments:

ஊர்சுற்றி said...

என்னது!
கூட்டிலிருந்து தேன்!
பூவிலிருந்து பால்!
வாசலை ஆகாயமாக்கி!
சுவாசங்களுக்கிடையில் எழுத்து???

கலக்குறீங்க மேடி!

Unknown said...

சரியாய் புரியல..!??

Unknown said...

@ ஊர்சுற்றி ,

நன்றிங்க தலைவரே.....!!

Unknown said...

@ பட்டிக்காட்டான் ,

திரும்பத் திரும்ப ஆழமா படிங்க.... கண்டிப்பா புரியும்.....!! வருகைக்கு நன்றி...!!

ஈ ரா said...

நண்பா...

அருமை,

ஒவ்வொரு சுவாசத்துக்கு இடையிலும் என்று "ஒருமையை" உபயோகித்துப் பாருங்களேன்....

அன்புடன்

ஈ ரா

அ.மு.செய்யது said...

கவிதை கலக்குது தல....ரசனையான வரிகள்.

நயன் புகைப்படம் போட்டதற்காகவே நம்ம அண்ணன் நாமக்கல் சிபி அவர்கள் உங்களுக்கு பொங்க வச்சி
கடா வெட்டுவாரு !!!!

கலகலப்ரியா said...

அட.. இந்தப்பக்கம் இப்போதான் வர மாதிரி இருக்கு.. நல்லா இருக்குதுங்கோ.. கவிதைகளும்.. காட்சிகளும்.. ! ஓட்டு சாவடி வைக்கலயோ.. !

நட்புடன் ஜமால் said...

அ.மு.செய்யது said...

கவிதை கலக்குது தல....ரசனையான வரிகள்.

நயன் புகைப்படம் போட்டதற்காகவே நம்ம அண்ணன் நாமக்கல் சிபி அவர்கள் உங்களுக்கு பொங்க வச்சி
கடா வெட்டுவாரு !!!!
]]

அதே அதே

KARTHIK said...

// தாயப்பாலூட்டியது //

கவிஞரே இதுக்கு என்ன அர்த்தம்

நேசமித்ரன் said...

மிக அருமை
ரசனையான வரிகள்.

ஹேமா said...

மேடி,காதலும் அனபும் பிரிவும் அதன் ஆற்றாமையும் சேர்ந்தே கலக்குகிறது கவிதை.

அதற்கு நடிகையின் படம்தான் கிடைத்ததா உங்களுக்கு ?

வால்பையன் said...

அது சரி!

vasu balaji said...

அருமை.

Unknown said...

@ ஈ ரா ,

நன்றிங்க தோழரே... !!



// ஒவ்வொரு சுவாசத்துக்கு இடையிலும் என்று "ஒருமையை" உபயோகித்துப் பாருங்களேன்.... //





ஒரு சுவாசம் என்பது ஒருமை....!! ஒவ்வொரு சுவாசத்துக்கு இடையிலும் என்கின்ற போது இரு சுவாசங்களுக்கு இடையிலான எழுத்துக்கள் என்றே குறிக்கின்றது .. அது பண்மையல்லாவா ....

Unknown said...

@ அ.மு.செய்யது ,

நன்றி மச்சி....



// நயன் புகைப்படம் போட்டதற்காகவே நம்ம அண்ணன் நாமக்கல் சிபி அவர்கள் உங்களுக்கு பொங்க வச்சி கடா வெட்டுவாரு !!!! //




கடுப்பாகி என்ன வெட்டாம இருந்தா சரி.......!!

Unknown said...

@ கலகலப்ரியா ,

நன்றிங்க சகோதரி.....



// ஓட்டு சாவடி வைக்கலயோ.. ! //


உங்கள் பொன்னான இடுகைகளே... என் பொன்னான வாக்குகள்.....!! புதுசா எதுக்கு மற்றவர் ஓட்டுச் சாவடி....!!

Unknown said...

@ நட்புடன் ஜமால் ,


நன்றிங்க தோழரே.....





@ கார்த்திக்

// // தாயப்பாலூட்டியது //

கவிஞரே இதுக்கு என்ன அர்த்தம் //



உங்கள் வருகைக்கு என் நன்றிகள் கார்த்திக் ...

Unknown said...

@ நேசமித்ரன் ,

நன்றிங்க தோழரே.....

Unknown said...

@ ஹேமா ,

ரொம்ப நன்றிங்க...


// அதற்கு நடிகையின் படம்தான் கிடைத்ததா உங்களுக்கு ? //


ஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....!! திட்டாதீங்ககககக... திட்டாதீங்கககககக... ஏதோ நல்லருக்குதேன்னு போட்டேன்...!!

Unknown said...

@ வால்பையன் ,


வாங்க நட்பு..... உங்க வருகை என்னை பெருமைபடுத்தியது.... நன்றி.....!!

Unknown said...

@ வானம்பாடிகள் ,

ரொம்ப நன்றிங்க.....

ப்ரியமுடன் வசந்த் said...

//நான் வரைகின்ற
கவிதைகளுக்கு
உன் பெயர்ப்பூ தானே
தாயப்பாலூட்டியது//

ரொம்ப யோசுச்சு எழுதுன வரிகள்ன்னு நினைக்கிறேன்

நல்லாருக்கு மேடி

Unknown said...

@ பிரியமுடன்.........வசந்த் ,

நன்றிங்க தோழரே......

கலாட்டா அம்மணி said...

\\நம் காதல் கூட்டிலிருந்து
கண்ணீர்த் தேனெடுத்து\\

வரிகள் அருமை..

கவிதை நல்லா இருக்கு மேடி..

Anonymous said...

அருமை,

Unknown said...

@ கலாட்டா அம்மணி ,

ரொம்ப நன்றிங்க சகோதரி.....

Unknown said...

@ கடையம் ஆனந்த் ,

ரொம்ப நன்றிங்க தோழரே .....

க.பாலாசி said...

//நான் வரைகின்ற
கவிதைகளுக்கு
உன் பெயர்ப்பூ தானே
தாயப்பாலூட்டியது//

ARUMAIYANA VARIGAL NANBAA.MIGAVUM RASITHEN.

Anonymous said...

supera erukku

Unknown said...

@ பாலாஜி ,

நன்றிங்க பாலாஜி...

Unknown said...

@ மகா ,


உங்கள் முதல் வருகைக்கு நன்றிங்க....

பா.ராஜாராம் said...

நல்லா இருக்குங்க,
கவிதை!

Unknown said...

@ பா.ராஜாராம் ,

நன்றிங்க தோழரே.....

விஜயகுமார் said...

திரு. லவ்டேல் மேடி அவர்களே..
தயவு செய்து மற்றவரின் கவிதை நூலில் இருந்து
கவிதைகளை எடுத்து பதிவு செய்யவேண்டாம்.
இந்த கவிதை அனைத்தும் கவிஞர் திரு.மணிவசந்தம்
என்பவர் “ மின்னல் கொடிகள்” என்ற கவிதை நூலில்
2003 ஆண்டு வெளியிடப்பட்டது..
இந்த புத்தகத்திற்கு திரு.அறிவுமதி (திரைப்பட பாடலாசிரியர்) அனிந்துரை எழுதி உள்ளார்.
மற்றவரின் பாராட்டை பெற உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்..
உங்களோடு சேர்ந்து மற்றவரையும் ஏமாற்றுவது மிகவும் கொடுமையானது..