லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Wednesday, August 19, 2009

என்னுயிர்த் தங்கமணியே ....என்னுயிர்த் தங்கமணியே ....
என்னுயிர்த் தங்கமணியே!
உன்னைக் காணாத
கணங்களில்
தனிமையும் கூட
என் வேதனைகளுக்குத்
தங்கமுலாம் பூசி
சுவாசக் காற்றிலும்
சுடுநீர் கொதிக்க வைக்கிறதே!


இதிலிருந்து மீள்வதற்க்குத்தான்
மாம்பூவின் மகளே
உன்னிடம்
கொஞ்சம் தரிசனம் கேட்டேன்

ஆனால் நீ
உன் எம்.பி.ஏ தேர்வை
காரணம் காட்டி
நாள்தோறும் என்னை
மெளனத்தால் காயபடுத்திவிட்டு

மீண்டும்
கனவில் வந்து
பார்வையைப் போர்த்தி
கவி பாடுகிறாயே!


இதனால்தான்
எப்போதும்
என் இதயச் சரிவில்
இடிகளே துடிக்கின்றன....

45 comments:

வால்பையன் said...

இப்பவே தங்கமணி புராணமா!?

நடத்துங்க நடத்துங்க!

பிரியமுடன்...வசந்த் said...

//தங்கமுலாம் பூசி
சுவாசக் காற்றிலும்
சுடுநீர் கொதிக்க வைக்கிறதே!//

wow காதலில் புதுமையான வரிகள்

RAMYA said...

//
என்னுயிர்த் தங்கமணியே!
உன்னைக் காணாத
கணங்களில்
//

ம்ம்ம் அப்புறம் போன் நம்பர் கொடுங்க நான் பேசறேன்:))

RAMYA said...

//
என் வேதனைகளுக்குத்
தங்கமுலாம் பூசி
//

ரைட்டு.....

RAMYA said...

//
சுவாசக் காற்றிலும்
சுடுநீர் கொதிக்க வைக்கிறதே!
//

அப்போ தண்ணியை கொதிக்க வைக்க அடுப்பு வேண்டாமா :))

RAMYA said...

//
இதிலிருந்து மீள்வதற்க்குத்தான்
மாம்பூவின் மகளே
உன்னிடம்
கொஞ்சம் தரிசனம் கேட்டேன்
//

அவங்க மாம்பூவின் மகள்ன்னா நீங்கா யாரு அதே சொல்லலியே :))

RAMYA said...

//
ஆனால் நீ
உன் எம்.பி.ஏ தேர்வை
காரணம் காட்டி
நாள்தோறும் என்னை
மெளனத்தால் காயபடுத்திவிட்டு
//

ஹேய் தம்பி படிக்கட்டும் என்ன??

RAMYA said...

//
மீண்டும்
கனவில் வந்து
பார்வையைப் போர்த்தி
கவி பாடுகிறாயே!
//

ஓ என்ன கவி :-) எப்பூடி பாடறாங்க அதையும் சொல்லுறது :))

RAMYA said...

//
இதனால்தான்
எப்போதும்
என் இதயச் சரிவில்
இடிகளே துடிக்கின்றன....
//

அது சரி :))

RAMYA said...

ஹேய் தம்பி அருமையான கவிதை!

தங்கமணியும் படிக்கச் சொல்லுங்க.

வரிகள் அற்புதம்என்ற முலாம் பூசிக் கொண்டு கவிதைகளாக வந்திருக்கிறது

வாழ்த்துக்கள்!!

Ravee (இரவீ ) said...

ம்ம்ம் ... நல்லா இருக்கு உங்களது ஆதங்கம் ..

ஹேமா said...

மேடி என்ன ஆச்சு.பாவம் படிக்கிற பிள்ளைங்களை படிக்க விடுங்க.
படம் அழகு.

க. பாலாஜி said...

//ஆனால் நீ
உன் எம்.பி.ஏ தேர்வை
காரணம் காட்டி
நாள்தோறும் என்னை
மெளனத்தால் காயபடுத்திவிட்டு//

சரி விடுங்க தலைவரே. எம்.பி.ஏவே வேணுமா. ஒரு பி.ஏ. எம்.ஏ., பிஎஸ்.சி. இத மாதிரி எதாவது பாத்துக்கலாம்ல. ஏன்னா இவ்வளவு சிரமம் இருக்காதுல்ல.

கவிதை அருமை அன்பரே. படமும்தான்.

நட்புடன் ஜமால் said...

என்னங்க ஆச்சி

அதுக்குளேவே இப்படியா

-------------

கவிதை நலம்.

வானம்பாடிகள் said...

அதென்னாங்க மாம்பூவின் மகள்! பேரே (லவ்)டேல்(மேட்)டி. அப்புறம் புலம்பலுக்கு பஞ்சமா இருக்கும். ரொம்ப அருமையா இருக்கு.

லவ்டேல் மேடி said...

@ வால் பையன் ,

என்ன பன்றது ....!! வருகைக்கு நன்றிங்க பாஸ் ..
@ பிரியமுடன்...வசந்த் ,

நன்றிங்க தோழரே...

@ ரம்யா அக்கா ,


// ஹேய் தம்பி அருமையான கவிதை! //

நன்றின அக்கா


// தங்கமணியும் படிக்கச் சொல்லுங்க. //

நீங்க வேற... பேச வைக்கருத்துக்கே படாத பாடு பட்டு ஒரு கவிதை.....!! இத படிக்க வைக்க நான் இன்னும் எத்தனை கவிதை எழுதுறது...!!

@ Ravee (இரவீ ) ,

ரொம்ப நன்றிங்க .....
@ ஹேமா ,


நீங்க சொன்னா சரிதானுங்க.....!! படம் : " சகுந்தலை " யின் படம்...
@ க. பாலாஜி ,

அட... அப்புடியா....? ஏதோ கியூ'ல நிக்குற மாதிரி சொல்லிபோட்டீங்க ...!! அடி உழுந்தாலும் கவுண்ட மணி ரேஞ்சுக்கு வெளியில காட்டிகக் கூடாது...!! எல்லா பொண்டாட்டிக்கு பயந்த பசங்க.....

@ நட்புடன் ஜமால் ,


நன்றிங்க நட்பு .....

@ வானம்பாடிகள் ,


ஆஹா.. நல்ல பெயர் விளக்கமுங்க தலைவரே.... !! ரொம்ப நன்றிங்க...

மகேஷ் said...

இன்னும் ரெண்டு மாசம் தான் மாம்ஸ்!

லவ்டேல் மேடி said...

@ மகேஷ் ,


அஆவ்வ்வ்வ்வ்வ்....!! ஆமாண்டா மாப்ள.....!!

நட்புடன் ஜமால் said...

இன்னும் ரெண்டு மாசம் தான் மாம்ஸ்!]]

அப்படியா ...

சந்தோஷம் ...

ஜீவன் said...

மாம்பூவின் மகளே!! படிக்க நல்லா இருக்கு! அப்போ நீங்க யாரு ?

தனியா இருக்குரதுபோல உங்க படத்தைஇல்ல போட்டு இருக்கோனும் ????

Sadagopal Muralidharan said...

நான் ஏதோ தங்கமணிபிரபுக்கு (சிந்தனி) தகவல் சொல்லியிருக்கீங்க போல இருக்குன்னு வந்து படிச்சா? இங்கேயும் காதலா?
என்னமோ போங்க. கவிதை நல்லாத்தான் இருக்கு.

லவ்டேல் மேடி said...

@ நட்புடன் ஜமால் ,

நன்றிங்க தோழரே

@ ஜீவன் ( கேப்டன் ஜி ) ,


நன்றிங்க கேப்டன் ஜி ..


// தனியா இருக்குரதுபோல உங்க படத்தைஇல்ல போட்டு இருக்கோனும் ???? //


எனக்கு இணையா போட்டோ எதுவும் கெடைக்குல... !! சரி , என்னோட போட்டோ போடலாமின்னா ... எனக்கு பப்ளிசிட்டி பிடிக்காது.... !! அதுனால ........@ Sadagopal Muralidharan ,


// நான் ஏதோ தங்கமணிபிரபுக்கு (சிந்தனி) தகவல் சொல்லியிருக்கீங்க போல இருக்குன்னு வந்து படிச்சா? //


நல்லாருக்குது கத......//இங்கேயும் காதலா? என்னமோ போங்க. //


காதல்ல செம அடி வாங்கீருப்பீங்க போல.....// கவிதை நல்லாத்தான் இருக்கு. //


நன்றிங்க தோழரே....

வானம்பாடிகள் said...

ஒரு சின்ன விருது நண்பரே. ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.http://paamaranpakkangal.blogspot.com/2009/08/blog-post_22.html

பா.ராஜாராம் said...

கவிதை நல்லா இருக்கு.
படம் ரொம்ப நல்லா இருக்கு.

கலகலப்ரியா said...

nallaa irukkuthungov..

லவ்டேல் மேடி said...

// வானம்பாடிகள் said...

ஒரு சின்ன விருது நண்பரே. ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.http://paamaranpakkangal.blogspot.com/2009/08/blog-post_22.ஹ்த்ம்ல் //நன்றிங்க தோழரே..... பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறேன்....!!

லவ்டேல் மேடி said...

@ பா.ராஜாராம் ,

நன்றிங்க தோழரே..... உங்கள் முதல் வருகைக்கு.....

லவ்டேல் மேடி said...

@ கலகலப்ரியா ,


நெம்ப தேங்ஸ்ங் அம்முனிங்கோவ்.......

ஊர்சுற்றி said...

லவ்டேல் மேடி,

உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?!!!

ஐயகோ.... நீங்க நம்ம குலம்னு நினைச்சேனே!!! ஐயோ! என் செய்வேன்!

மகேஷ் said...

// ஊர்சுற்றி said...
லவ்டேல் மேடி,

உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?!!!
//

இது தெரியாதா? அது ஆச்சு நாலஞ்சு தடவை.

லவ்டேல் மேடி said...

// ஊர்சுற்றி said...

லவ்டேல் மேடி,

உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?!!! //ஹி..ஹி...ஹி..... இலீங்கோவ்...... நவம்பர் மாசம்தான் கண்ணாலமுங்கோவ்......!! நானு இன்னுமும் பியூர் ( விர்ஜின் ) ப்ரம்மச்சாரிங்கோவ்........ !!

லவ்டேல் மேடி said...

// மகேஷ் said...

இது தெரியாதா? அது ஆச்சு நாலஞ்சு தடவை. //


இந்த மாதிரி சில்வண்டு பசங்க பேச்ச நம்பாதீங்கோவ்.....!!

நானு இன்னும்
கொளந்த பயனுங்கோவ்....!!

கார்த்திக் said...

ஏக்கத்தின் எதிரொலி ???

அடங்கொய்யால
பார்ரா
இந்தப்பையனுக்குள்ள...

// ஆனால் நீ
உன் எம்.பி.ஏ தேர்வை
காரணம் காட்டி
நாள்தோறும் என்னை
மெளனத்தால் காயபடுத்திவிட்டு //

அப்புறம் எப்பர்ரா உம் பேருக்கு பின்னால ......மாதேஸ்வரBE MBA ன்னு போட்டுக்குரது.

லவ்டேல் மேடி said...

@ கார்த்திக் ,

வாங்க மொதலாளி...... !! உங்கள் வருகைக்கும்... இடுகைக்கும் நன்றிங்க மொதலாளி..!!


வீட்டுல எல்லோரும் நலமா.....?? நா கேக்குறது.. வீட்டுல... ....!!

ஊர்சுற்றி said...

திருமணத்திற்கு மறக்காமல் அழையுங்கள் நண்பரே! :)

எத்தனையாவது திருமணம்னாலும் சரி... :))))))

லவ்டேல் மேடி said...

// ஊர்சுற்றி said...

திருமணத்திற்கு மறக்காமல் அழையுங்கள் நண்பரே! :) //


கண்டிப்பாக தோழரே.... எல்லோரையும் திமண விழாவிற்கு அழைக்க நான் திட்டமிட்டுள்ளேன்....!! உங்கள மறந்துருவனா....?
// எத்தனையாவது திருமணம்னாலும் சரி... :)))))) ///குசும்பு....!! ரொம்ப குசும்பு....!!

மகேஷ் said...

// நானு இன்னும்
கொளந்த பயனுங்கோவ்....!! //

Nambittom!

லவ்டேல் மேடி said...

// மகேஷ் said...


Nambittom! //
be careful ....... என்னைய சொல்லிகிட்டேன்......!!

கலகலப்ரியா said...

seri pavama irukkunnu namma site la irukkira award athaanunga scrumptious blog award - am .. engathaan peru thedi kandu pudukkiraanuvalo.. konjam eduththuttu ponga pls..

லவ்டேல் மேடி said...

// கலகலப்ரியா said...

seri pavama irukkunnu namma site la irukkira award athaanunga scrumptious blog award - am .. engathaan peru thedi kandu pudukkiraanuvalo.. konjam eduththuttu ponga pls.. //ரொம்ப நன்றிங்க சகோதரி....!!

எம்.எம்.அப்துல்லா said...

ரைட்டு

:)

லவ்டேல் மேடி said...

@ எம்.எம்.அப்துல்லா ,


ரொம்ப நன்றிங்க தோழரே .....

கும்க்கி said...

அல்லாரையும் கலாய்க்கறீங்களே மேடி...கொஞ்சம் உசுப்பேத்தலாமேன்னு வந்து பாத்தா நவம்பர் மாசம் ஆயுள்தண்டனைன்னு சொல்லிபோட்டீங்க....
என்னமோ போங்க லவ்டேலு.....உங்கள நெனச்சா பரிதாபமாத்தான் இருக்கு.

லவ்டேல் மேடி said...

@ கும்கி ,

ஆஅவ்வ்வ்வ்.... ஆமாங்கண்ணே....! என்ன பண்ணுறது....!! விதி...!!

விஜயகுமார் said...

திரு. லவ்டேல் மேடி அவர்களே..
தயவு செய்து மற்றவரின் கவிதை நூலில் இருந்து
கவிதைகளை எடுத்து பதிவு செய்யவேண்டாம்.
இந்த கவிதை அனைத்தும் கவிஞர் திரு.மணிவசந்தம்
என்பவர் “ மின்னல் கொடிகள்” என்ற கவிதை நூலில்
2003 ஆண்டு வெளியிடப்பட்டது..
இந்த புத்தகத்திற்கு திரு.அறிவுமதி (திரைப்பட பாடலாசிரியர்) அனிந்துரை எழுதி உள்ளார்.
மற்றவரின் பாராட்டை பெற உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்..
உங்களோடு சேர்ந்து மற்றவரையும் ஏமாற்றுவது மிகவும் கொடுமையானது..