லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Friday, August 7, 2009

ஹைக்கூ அவியல் -2 ........
ஹைக்கூ அவியல் -2 ........கடவுள் கை விரல்களுக்கு
இடையில் இடைவெளி
குடுத்தது எதற்காக?
சிறந்த நண்பன் வந்து
அந்த இடத்தை அவனது
விரல்களால் நிரப்புவதற்காகவே .....
---------------------------------------


குழந்தைபோலதான் நட்பும்
நீ மேலே தூக்கி எரிந்தாலும்
சிரிக்கும் - அதற்க்கு தெரியும்
நீ திரும்ப
பிடிப்பாய்யென்று .....


-----------------------------------------பூக்களுக்கு ஒருநாள்தான்
ஆயுள் - ஆனால்
அதையும் பறித்து பூஜை
செய்கிறான் மனிதன் -
" நீண்ட ஆயுள் வேண்டி"...


--------------------------------------------நீ யாருக்காகவும்
கண்ணீர் சிந்தாதே- உன்
கண்ணீருக்கு தகுதியானவர்கள்
உன்னை கண்ணீர் சிந்த விடமாட்டார்கள்...


---------------------------------------
மீண்டும் ஒருமுறை
என்னை திரும்பி
பார்க்காதே-
இழப்பதற்கு என்னிடம்
இல்லை இன்னொரு இதயம்....

லவ்டேல் மேடி ..........

27 comments:

நட்புடன் ஜமால் said...

கடவுள் கை விரல்களுக்கு
இடையில் இடைவெளி
குடுத்தது எதற்காக?
சிறந்த நண்பன் வந்து
அந்த இடத்தை அவனது
விரல்களால் நிரப்புவதற்காகவே .....]]


மிக மிக மிக சிறப்பு நண்பரே!

நட்புடன் ஜமால் said...

குழந்தைபோலதான் நட்பு
நீ மேலே தூக்கி எரிந்தாலும்
சிரிக்கும் -
அதற்க்கு தெரியும் நீ திரும்ப
பிடிப்பாய்யென்று .....
]]

வாவ்! சொல்ல வைத்தன வரிகள்

ராமலக்ஷ்மி said...

எதைச் சொல்ல எதை விட?

எல்லாமே அருமை மேடி!

வாழ்த்துக்கள்!

நிறைய எழுதுங்கள்!

அ.மு.செய்யது said...

பூக்கள் கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மேடி..

அடிச்சி ஆட்றீங்க....

பாலாஜி said...

//பூக்களுக்கு ஒருநாள்தான்
ஆயுள் - ஆனால்
அதையும் பறித்து பூஜை
செய்கிறான் மனிதன் -
" நீண்ட ஆயுள் வேண்டி"...//

மிக நன்றாக உள்ளது. நச்...

பூ போட்டாலும் குத்தம், பூ குடுத்தாலும் குத்தம், எப்டில்லாம் யோசிக்கராங்கப்பா?

நாஞ்சில் நாதம் said...

நல்லாயிருக்கு பாஸ்
வாழ்த்துக்கள்!

நேசமித்ரன் said...

அருமைங்க
படமும் எழுதும் படத்துக்கு எழுத்த எழுத்துக்குப் படமான்னு போட்டி போடுது
ஒரே ஒரு விண்ணப்பம் தட்டச்சு பிழைகளை சரி பார்க்கவும்

ஹேமா said...

//குழந்தைபோலதான் நட்பு
நீ மேலே தூக்கி எறிந்தாலும்
சிரிக்கும் -
அதற்குத் தெரியும் நீ திரும்ப
பிடிப்பாய் என்று .....//

படங்களும் குட்டிக் கவிதைகளும் கலக்குது.கண் பெரிதாக விரித்திருக்கும் குழந்தை அப்படியே உயிரோட்டமாக இருக்கு.

வால்பையன் said...

//கடவுள் கை விரல்களுக்கு
இடையில் இடைவெளி
குடுத்தது எதற்காக?//

சிகரெட் பிடிப்பதற்காக!

வால்பையன் said...

//பூக்களுக்கு ஒருநாள்தான்
ஆயுள் - ஆனால்
அதையும் பறித்து பூஜை
செய்கிறான் மனிதன் -
" நீண்ட ஆயுள் வேண்டி"...//

உயிர்பலி கொடுப்பது
காண்டுமிராண்டிகளுக்கு
வழக்கம் தானே!

வால்பையன் said...

//மீண்டும் ஒருமுறை
என்னை திரும்பி
பார்க்காதே-
இழப்பதற்கு என்னிடம்
இல்லை இனொரு இதயம்....//

வூட்டுகாரம்மாகிட்ட சொல்லனுமா!?

லவ்டேல் மேடி said...

@ நட்புடன் ஜமால் ,

ரொம்ப நன்றிங்க நட்பு.....!!

லவ்டேல் மேடி said...

@ ராமலக்ஷ்மி சகோதரி ,


நன்றிங்க சகோதரி.......!! கண்டிப்பாக எழுதுகிறேன்.....!!

லவ்டேல் மேடி said...

@ அ.மு.செய்யது ,

வாங்க மச்சி.... ரொம்ப நன்றிங்க மச்சி.....

லவ்டேல் மேடி said...

@ பாலாஜி ,


ரொம்ப நன்றிங்க பாலாஜி....

லவ்டேல் மேடி said...

@ நாஞ்சில் நாதம் ,

நன்றிங்க தோழரே .....

லவ்டேல் மேடி said...

@ நேசமித்ரன் ,

நன்றிங்க தலைவரே.... பிழைகளை திருத்திவிட்டேன் , மேலும் பிழைக்கு மன்னிக்கவும்.... ஆஆவ்வ்வ்வ்.....!!!!!

லவ்டேல் மேடி said...

@ ஹேமா ,


ரொம்ப நன்றிங்க.... !! ஆமாங்க ... அந்த படம் என்னையும் மிகவும் கவர்ந்தது.....!!

லவ்டேல் மேடி said...

@ வால்பையன் ,

// வூட்டுகாரம்மாகிட்ட சொல்லனுமா!? //


ஹலோ..... ஹலோ......


வால்பையன்.... என்னோட மெசேஜ் உங்குளுக்கு கெடைக்குதா...?

உங்குளுது எதுவும் எனக்கு கெடைக்குல.....!!

இங்க கொஞ்சம் நெட் சிக்னல் வீக்கு.......


ஹலோ....ஹலோ.....லவ்டேல் மேடி இஸ் கரன்ட்லி நாட் ரீச்சபுள்....!!!

லவ்டேல் மேடி இஸ் கரன்ட்லி நாட் ரீச்சபுள்....!!!

லவ்டேல் மேடி இஸ் கரன்ட்லி நாட் ரீச்சபுள்....!!!

லவ்டேல் மேடி இஸ் கரன்ட்லி நாட் ரீச்சபுள்....!!!

லவ்டேல் மேடி இஸ் கரன்ட்லி நாட் ரீச்சபுள்....!!!

ஈ ரா said...

லவ்டேல்

இன்றைக்குத்தான் தங்கள் தளத்திற்கு முதல் முறையாக வருகிறேன்...

அசர வைக்கிறீர்கள்...

வாழ்த்துக்கள்...

அன்புடன்

ஈ ரா

லவ்டேல் மேடி said...

@ ஈ ரா ,


உங்கள் முதல் வருகைக்கும் .... வாழ்த்துக்கும் ... நன்றிங்க தோழரே.....!!!

கார்த்திக் said...

// மீண்டும் ஒருமுறை
என்னை திரும்பி
பார்க்காதே-
இழப்பதற்கு என்னிடம்
இல்லை இன்னொரு இதயம்....//

டேய் இத நம்மவே முடியல
நீயா நீயா இப்படி எழுதுன
இல்ல மண்டபத்துல யாராவது எழுதிக்குடுத்ததா.

நெசமா நீதான் எழுதுதிருந்தீனா
என்னோடா வாழ்துக்கள் :-))

லவ்டேல் மேடி said...

@ கார்த்திக் ,


உங்கள் வருகைக்கும்... இடுகைக்கும்... நன்றிங்க கார்த்திக்....

சுரேகா.. said...

எல்லா ஹைக்கூவும் சூப்பரப்பா!

லவ்டேல் மேடி said...

@ சுரேகா ,


நன்றிங்க தலைவரே....!!

Anonymous said...

எல்லா கவிதைகளும் சூப்ப்ர்

லவ்டேல் மேடி said...

@ மகா ,


ரொம்ப நன்றிங்க....