லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Friday, March 27, 2009

வாழ்க்கை...

நான் , என் கம்பனி ப்ரஜச்ட்டுக்காக திருச்சியில் ஆறு மாதகால பணியில் உள்ளேன் . விடுமுறை நிமித்தமாக நேற்று ( 26.03.2009 ) வியாழகிழமை மாலை திருச்சியிலிருந்து எனது சொந்த ஊரான ஈரோட்டுக்கு கிளம்பினேன் . திருச்சி-ஈரோடு நேரடி பேருந்தில் ஏறினால் மொக்கை போடும் என்பதால் , திருச்சி-கரூர் தனியார் பேருந்தில் ஏறினேன் .

பேருந்து கிளம்பி திருச்சி நகரை விட்டு வெளியே வந்ததும் ..
ஒருபுறம் காவிரியும் மறுபுறம் பச்சை தோல் போர்த்திய ரம்மியமான கிராமங்களுக்கு இடையே செல்லும்போது ..... பங்குனி வெய்யிலின் உருக்கத்தில் உருகிக்கொண்டிருந்த அனைவருக்கும் சில்லென்ற காற்று வருடியதில் ஒரு மென்மை. அந்த மென்மையை மெருகேத்துவதுபோல் பேருந்தில் இளையராஜாவின் பாடல்கள் ஒலித்தது.


இப்படியாக சென்றுகொண்டிருந்த குளுமையில் .. குளித்தலையை தாண்டியவுடன் லாலாபேட்டை என்ற ஊர் வந்தது . அங்குதான் என் மனதை உருகவைத்த சம்பவம் ஒன்று :அங்கு மல்லிகைபூ , பலாச்சுழை , திராச்சைப்பழம் போன்றவற்றை ஒரு சிறு பாலிதின் கவரில் இட்டு ரூ.10 என விற்றவர்கள் யார் தெரியுமா..............??

.


.

.


.

10 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியும் , 12 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனும் , வளர்ச்சி குன்றிய ஒரு பெண்ணும் .

சிறுமி : ( என்னிடம் ) அண்ணே..!! பெலாபலம் வாங்கிக்கன்னே...!!!


அதை நான் வாங்கிக்கொண்டவுடன் , அந்த அழுக்கு படிந்த முகத்தில் ஒரு அழகிய புன்னகை ... ( இதை எழுதும்பொழுது என் கண்ணில் பொங்கும் கண்ணீர் துளியை என்னால் தடுக்கமுடியவில்லை ) .சிறு வயதிலேயே உழைப்பின் வாடையை கண்ட இப்பிஞ்சின் உள்ளம் எத்தனை கனத்ததாக இருக்ககூடும் ......!!!!!


பேருந்து நின்று , புறப்படும் சில வினாடிகளுக்கு உள்ளாகவே முடிந்தளவு விற்றாகவேண்டும் என்கின்ற இலக்கினோடு பேருந்தினுள் பரபரப்பாக வியாபாரம் நடைபெற்றது...!!ஆனால்........ கொடூர மனதுடைய பேருந்து ஓட்டுனர் விருட்டென்று பேருந்தை இயக்க ஆரபித்துவிட்டார் ...... ஓடும் பேருந்திலிருந்து சிறுவன் சட்டென்று குதித்து விட்டான் ...!! ஆனால் சிருமியாலும் , வளர்ச்சி குன்றிய பெண்ணாலும் ஓடும் பேருந்திலிருந்து இறங்க முடியவில்லை .....


சிறுமி : அண்ணே ..!! அண்ணே ..!! செத்த நிருத்தன்னே...!!! நாங்க எரங்கிகிறோம் .....!!

ஓட்டுனர் : எலேய் ...!! என்ன வெலாடுரிகளா ரெண்டுபேரும்.....!!!!

வ. கு. பெண் : தம்பி இல்லபா ....!! சத்த நிறுத்துநீனா இறங்கிக்குவோம்ல ...!!!

நடத்துனர் : ( கேவலச் சிரிப்புடன் ) எலேய் ...!! இதுக்கு நாம தம்பியாமாடா.....!!!
கொஞ்ச நேரத்தில் ஒரு வாய்க்கால் பாலம் வந்தது... அங்கே ஒரு வேகத்த்தடையும் இருந்தது . அங்கே பேருந்தின் வேகத்தை ஓட்டுனர் குறைத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் , பேருந்தின் வேகம் கணிசமாக குறைக்கப்பட்டது ... வழி அறியா ரெண்டுபேரும் ( சிறுமி , வ.கு. பெண் ) குதித்தனர் ... இலக்கு தவறிய சிறுமி கீழே விழுந்து காயத்துடன் அழுதால் , ஆனால் ஒரே ஒரு பலாச்சுழை பாக்யட் மட்டும் கையில் இருந்ததால் பொருட்சேதம் பெரிதும் இல்லை . நடத்துனர் அவர்களை பார்த்து ஒரு கேவலச் சிரிப்பு சிரித்தான் ..........

.

.

.

இப்படியும் ஒரு வாழ்க்கை இறைவனின் படைப்பில் ....???

8 comments:

SudhaPrabhu said...

i have seen this many times., its really horrible.,

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

எல்லா இடங்களிலும் இது தான் நடக்குது மேடி. கொடுமை தான். ;(

சென்ஷி said...

மிகக்கொடுமையான நிகழ்வு மேடி :((

லவ்டேல் மேடி said...

@ சுதாபிரபு


@ சஞ்சய்காந்தி


@ சென்ஷிதாங்கள் மூவரின் வருகைக்கு என் மனமுவந்த நன்றி .

தமிழ்நெஞ்சம் said...

என்ன கொடுமை சார் இது?

இந்தக் கொடுமையிலே இந்தியாவாவது - வல்லரசாக ஆவதாவது?

பெலாப்பலம் விக்கக்கூட இந்த நாட்டில் உரிமை இல்ல. இப்படி இருக்கும்போது !!

லவ்டேல் மேடி said...

நன்றிங்கோ தமிழ்நெஞ்சம் ........

ராமலக்ஷ்மி said...

இரக்கம் என்பதை ஏன் மனிதர்கள் தங்கள் இயல்பினில் ஒன்றாக எப்போதும் கொண்டிருப்பதில்லை என்கிற கேள்வியையும் எழுப்புகிறது பதிவு.

லவ்டேல் மேடி said...

நெம்ப நன்றிங்கோ......!!