லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Saturday, July 18, 2009

பிஞ்சுலையே பழுத்தது.....

பிஞ்சுலையே பழுத்தது.....
எந்த நேரமும் கூட்ட நெரிசல் கொண்ட தி-நகர் ரங்கநாதன் தெரு ..... !!


" ஏதோ சொல்ல வந்தேன் ... ஆனா மறந்துட்டேன் ..." என்பதைப் போல ஓயாமல் கரைக்கு வந்து திரும்பிச் செல்லும் கடல் அலைகளை கொண்ட அழகிய மெரீனா......!!


வற்றாத ஜீவனதியிலே தன்னை சேர்க்க மறந்த சென்னைவாசிகளை தன் துர்நாற்றத்தால் பலி வாங்கும் கூவம் நதி.....!!!!


ஓயாமல் ஏதாவது ஒரு தொடர் வண்டியின் பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கும் சென்ட்ரல் ரயில் நிலையம்.....!!


எந்த நேரமும்... ஈக்கள் மொய்க்கும் பலாச்சுழை போல கோயம்மேடு மார்கெட்.....!!


ஓய்வில்லாமல் .. எந்த நேரத்திலும் அணையா விளக்காய் ஒளிரும் கண்ணாடி அழகுப் பதுமைகளாய் பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் ....!!!!இத்துணை அம்சங்களையும் .... அழகினையும் கொண்ட .... நம் சிங்காரச் சென்னையிலே..... அசோக் நகர் காந்திஜி தெருவில் மந்த்ரி அப்பார்ட்மென்ட்டில் B 12 லில் வசிக்கும் சிவசுப்பிரமணி மற்றும் கோகிலாவாணி தம்பதியரின் தவப் புதல்வன் கிஷோரும் ..... அதே மாநகரில் , அதே பகுதியில் , அதே தெருவில் , அதே அப்பார்ட்மென்ட்டில் B 13 வசிக்கும் சரவணாகுமார் மற்றும் கவிதா தம்பதியினரின் தவப் புதல்வனாகிய ஆகாஷும் .... அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீ . ஆழ்வார் மெட்ரிக் பள்ளியில் L.K.G "A" செக்சனில் படித்துக்கொண்டிருந்தனர்.


கிஷோரும் ... ஆகாஷும் .... இணை பிரியா நண்பர்கள்...!!! விட்டுக்கொடுத்து போவது , பகிர்ந்தளித்தல்... போன்ற எல்லா விஷயங்களிலும் இருவரும் சமம் ....!! படிப்பிலும் , விளையாட்டிலும்... இருவரும் படு சுட்டிகள்..!!------------------------காட்சி - 1


இடம் : வகுப்பறை


காலம் : ஆங்கில வகுப்பு. ( மதிய இறுதி வகுப்பு )


( கிஷோர் எப்பொழுது இல்லாத அளவுக்கு சேர் மார்கட்டில் பணத்தை விட்டவன் போல சோகமாக காணப்பட்டான் ... )


( அதை கவனித்துக் கொண்டிருந்த ஆகாஷினால் என்னவென்று கேட்காமல் இருக்க முடியவில்லை... !! ஆனால் கேட்டால் ஏதாவது தவறாக நினைப்பானோ என்று எண்ணி அமைதியாக இருந்தான்....!!! ஒரு கட்டத்தின் மேல் அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை.....!!! )


ஆகாஷ் : மச்சா.... உன்கு இன்னாடா ஆச்சு... இப்டி பீல ( feel ) போட்டு குந்திகினு இருக்க...!!


கிஷோர் : நா ரொம்ப அப்செட்டா இருக்கான் மச்சா ....!!!


ஆகாஷ் : இன்னா ஆச்சு மாமே .....??? ஊட்டாண்ட உ ... நைனா எதாங்காண்டி போர்ஸா கொர்லு குத்தாரா....??


கிஷோர் : இல்ல மாமே....!!


ஆகாஷ் : உ....மம்மி எ...னாதும் சொல்ச்சாடா....???


கிஷோர் : அதும்...... இல்ல மாமே....!!


ஆகாஷ் : பின்ன இன்னாடா.....???


கிஷோர் : நேத்திகில்ல.... இஸ்கூலு முட்ஞ்சு போரசொல்லோ .... என் ஸ்லேட்டு ஒட்ஞ்சிச்சி மாமே....!!!

ஆகாஷ் : அப்பால.....???


கிஷோர் : ஒரே பீலிங்கா ஆட்சு....!! அப்பால... ஸ்லேட்டு வாங்க ஸ்பென்சர் பிளாசா போன மாமே....!!! .......த்தா இன்னா பிகருங்க........!!!


ஆகாஷ் : எ.... மெய்யாலமா கூவுற....!! இன்னா மாமே ... ஒரு கொர்லு குத்துருந்தா நானும் சோக்கா ட்ரெஸ் பண்ணிகின்னு ரைடு ஆயிருப்பன்ல்ல .....!!!


கிஷோர் : சாரி மாமே ... !! அப்போ மைண்டுல ஒர்கவுட் ஆவ்ல ....!!

ஆகாஷ் : அத்த உடு மாமே... நீ மேல சொல்லு....


கிஷோர் : அப்ப்டீகா திரும்பி பீச்சாங்கை பக்கமா ஒரு ஸ்லேட்டு கட இர்ஞ்சு மாமே...!! அப்டியே கட்கி பக்கத்துல போனன்பாரு.....!!!

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்........ ஸப்பாஆஆஆ..............!


" நெசுக்குள் பெய்திடும் மாமழை ..... "


ஒரு செம பிகரு மாமே......!! ஒரு ஒன்ற வைசு இருக்கும்....!! அவ அம்மா மடியில குந்திகினு.... மொர்ச்சு... மொர்ச்சு..... பாத்தாட...........!!!


ஆகாஷ் : அய்யோஓஓ......!! அப்பால........

கிஷோர் : அப்படியே... ஒரு ஸ்மைலு உட்டா மாமே....!!! அப்ப்பா.....!!!

ஆகாஷ் : அப்பால இன்னா ஆச்சு மாமே.....???


கிஷோர் : நானும் ஒரு பலூன வாங்கி ஊதுற மாதிரி செம சீன போட்டன் மாமே....!! ஆனா சடனா அவ என்ன பாக்காம .... பேக் சைடு லுக் உட்டுனு இருந்தா....!! அப்பாலதான் தெர்ஞ்சுது... ஆன்ட ஒரு போகு பய ... ரயிலு பொம்மைய வெச்சு சீன் போட்டுட்டு இருந்தான்.....!!


செம காண்டாய்ர்சே மாமே...!! நேத்தில இர்ந்து ... செர்லாக் , உட்வார்ஸ் , மம்.....மம்... எத்துமே துன்ல மாமே....!!!

ஆகாஷ் : உடு மாமே ... பீல் பண்ணாத...... !!! அவ அட்ரஸ் இர்க்கா மாமே...!!

கிஷோர் : ம்ம்ம்ம்ம்....


ஆகாஷ் : அப்போ பீல் பண்ணாம குஜாலா இரு மாமே... !! நம்ம பேட்டையாண்ட சொல்லி .. அவ ஊடு பூந்து தொட்டிலோட தூக்கிரலாம் மாமே....!!!


டிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரீங் ................. ( பெல் அடித்தது )


வகுப்பு முடிந்தது...........!!!


இங்ஙனம் ,லவ்டேல் மேடி........


22 comments:

சென்ஷி said...

:))))

செம்ம கலக்கல் டயலாக்ஸ்..! நல்லா சிரிச்சுட்டேன் தலைவா!

//கிஷோர் : நானும் ஒரு பலூன வாங்கி ஊதுற மாதிரி செம சீன போட்டன் மாமே....!! ஆனா சடனா அவ என்ன பாக்காம .... பேக் சைடு லுக் உட்டுனு இருந்தா....!! அப்பாலதான் தெர்ஞ்சுது... ஆன்ட ஒரு போகு பய ... ரயிலு பொம்மைய வெச்சு சீன் போட்டுட்டு இருந்தான்.....!! //

ROTFL

லவ்டேல் மேடி said...

@ சென்ஷி ,


நன்றிங்க தோழரே ..... !! என்றும் ... எல்லோரும்..... மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதே என் நோக்கம்......!!வருகைக்கு என் மனமார்ந்த நன்றி.......!!!

நாமக்கல் சிபி said...

சூப்பர்!

தமிழ் பிரியன் said...

சென்ஷி சொல்லி வந்தேனுங்க... செம கலக்கல் மாமே!

லவ்டேல் மேடி said...

// நாமக்கல் சிபி said...

சூப்பர்! //நன்றிங்க தலைவரே ....

லவ்டேல் மேடி said...

// தமிழ் பிரியன் said...

சென்ஷி சொல்லி வந்தேனுங்க... செம கலக்கல் மாமே! //தேங்க்ஸ் மாமே.......!!!!

நிஜமா நல்லவன் said...

ஹா...ஹா...ஹா...செம கலக்கல் தலைவா:)

லவ்டேல் மேடி said...

@ நிஜமா நல்லவன் ,


நன்றிங்க தோழரே ......

மகேஷ் said...

ஒரு நாலு வரி எஸ்ஸெம்மெஸ்....

அத இவ்வளவு அழகா பில்ட் அப் பண்ணி இருக்கீங்க!

கலக்குங்க!

லவ்டேல் மேடி said...

@ மகேஷ் ,


கரு இல்லாமல் கதை இல்லை.......!!உங்கள் வருகைக்கு நன்றிங்க மகேஷ்.......!!!!

மகேஷ் said...

இது உங்க சின்ன வயசு கதை தானே?

லவ்டேல் மேடி said...

/// மகேஷ் said...

இது உங்க சின்ன வயசு கதை தானே? //
பத்தவெச்சிட்டியே பரட்ட...........!!!!

ஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........!!!!!!!

RAMYA said...

யப்பா ஒண்ணுமே சொல்ல முடியலே கல்க்குறீங்க.

என்ன பில்ட்டப்பு என்ன சென்னை தமிழ்.

பூந்து விளையாடிருக்கீங்க ஹி ஹி ஹி ஹி.

கற்பனை அருமையா இருக்கு :))

லவ்டேல் மேடி said...

@ ரம்யா அக்கா ,


ரொம்ப நன்றிங்க அக்கா......!!

gayathri said...

hey super pa

நட்புடன் ஜமால் said...

போட்டு தாக்குறியள்

பாஷைகளை நன்றாக கட்டுக்குள் கொண்டு வருகின்றீர்கள்

நாஞ்சில் நாதம் said...

நல்லாயிருக்கு. என்ன தல ஒவ்வொரு வரிக்கும் நிறைய இடைவெளி விட்டுருக்கீங்க

ஹேமா said...

மேடி,உண்மையையும் கற்பனையையும் கலக்கி ஒரு கலக்கல்.உண்மை சொல்லுங்க.
இது உங்க கதைதானே...!

லவ்டேல் மேடி said...

// gayathri said...

hey super pa //thanks pa.....

லவ்டேல் மேடி said...

// நட்புடன் ஜமால் said...

போட்டு தாக்குறியள்

பாஷைகளை நன்றாக கட்டுக்குள் கொண்டு வருகின்றீர்கள் //ரொம்ப நன்றிங்க தோழரே....!!!!

லவ்டேல் மேடி said...

// நாஞ்சில் நாதம் said...

நல்லாயிருக்கு. என்ன தல ஒவ்வொரு வரிக்கும் நிறைய இடைவெளி விட்டுருக்கீங்க //
இடைவெளி இல்லாம இருந்தா .. படிக்க கஷ்ட்டமா இருக்கும் 'னுதான் .... அப்படி எழுதி இருந்தேன்...!! இப்போ மாத்திட்டேன்....!! ஓக்கேவா.....???


இதுக்கு மேல இடைவெளி கம்மி பண்ணுனா.... பதிவு நமிதா டிரஸ் மாதிரி ஆயிரும்.....!! ப்ளீஸ்.... நல்லாருக்குன்னு சொல்லீருங்க தலைவரே......!!!!

லவ்டேல் மேடி said...

/// ஹேமா said...

மேடி,உண்மையையும் கற்பனையையும் கலக்கி ஒரு கலக்கல். //


ரொம்ப நன்றிங்க.......
// உண்மை சொல்லுங்க.
இது உங்க கதைதானே...! ///ஹலோ.....!! ஹலோ....!!

நா அனுப்புற மெசேஜ் உங்குளுக்கு கெடைக்குதா....


ஹலோ.....!! ஹலோ....!!


இங்க டவர் சிக்னல் கொஞ்சம் வீக்கா இருக்கு......


ஹலோ.....!! ஹலோ....!!


லவ்டேல் மேடி இஸ் கரண்ட்லி நாட் ரீச்சபுள்......!!!!

லவ்டேல் மேடி இஸ் கரண்ட்லி நாட் ரீச்சபுள்......!!!!

லவ்டேல் மேடி இஸ் கரண்ட்லி நாட் ரீச்சபுள்......!!!!

லவ்டேல் மேடி இஸ் கரண்ட்லி நாட் ரீச்சபுள்......!!!!