லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Thursday, July 16, 2009

அரும்புகள் ..........




அரும்புகள் ..........












சுறுசுறுப்பாய் ஓடித்திரியும்
எறும்பிணத்தைப் போல்
எங்கள் பருவம்....















என் போன்ற
சின்னஞ்சிறு அரும்புகள்
பாடசாலைக்குச் சென்று
பால் சொற்களை வாசிக்காமல்


ஊசிகுத்தும் உச்சிவெயிலில்
வேரறுந்து வாடி நின்று
வேலைப் பழுவில் சிக்கி
துளைவிழுந்து கிடக்கின்றோம்!













கனவில் மட்டுமே
கற்கண்டு மழை பெய்தது -
ஆனால்
வாழ்வின் கையில்
வெறும் கருங்கற்கள்!








எங்களுக்கு
வறுமைதான் வீட்டுக்கூரை
கசிகின்ற தவிப்புகளே
இரைப்பை நிரப்பும் உணவு!


தினமும்
குடும்பத்தின் பாரம்
வீட்டை
வீதிக்கு நகர்த்தி வந்தபோது -
நாங்கள்
மூன்றடி உயரம்
முழுமை பெற்றிருந்தால்-

எமது இமைகள் மீது
இமையமலையை
இறக்கி வைக்கப்படுகிறது!


உள் உறுப்புகள் கந்தலாகி
ஆயுள் குளம் சுருங்கி
அரைப் புள்ளியாகிவிட்டது !








இனியும்
குடும்பச் சூழலைச்
சுட்டிக் காட்டி

இந்தச் சிறிய சிறகுகளைச்
சிறையிடாதீர்கள்!








நாங்கள் காற்று

எங்களுக்குக்
கண்ணீர் துளிகளில்
கவசம் வேண்டாம்

திறந்த வெளியில்
ஒரு வாழ்க்கை வேண்டும்.









இங்ஙனம் ,


லவ்டேல் மேடி..........







20 comments:

நட்புடன் ஜமால் said...

ரொம்ப வேதனையா இருக்கு ...


வேறு ஒன்றும் செய்யவோ/சொல்லவதற்கோ இப்போதைக்கு இல்லை

நாமக்கல் சிபி said...

:(

யதார்த்தத்தை நல்லா சொல்லி இருக்கீங்க!

RAMYA said...

இதயம் கனக்கின்றது கண்கள் பனிக்கின்றன.

பிஞ்சு உள்ளத்தின் நெஞ்சில் உள்ள உணர்வுகளை யாருமே உணரவில்லையே!

இவர்களுக்குத்தான் என்ன செய்வது
என்ன சொல்வது என்று தெரியலை, புரியலை :((

தமிழ் அமுதன் said...

இந்திய தேசிய கொடியை விற்பனை செய்யும்
இந்தியாவின் குழந்தை தொழிலாளி !

நச்!!

RAMYA said...

நாம் உணரும் சராசரி சுவாசகாற்று
என்று தீண்டிடும் இந்த பிஞ்சு உள்ளங்களை :((

RAMYA said...

//
நாங்கள் காற்று
எங்களுக்குக்
கண்ணீர் துளிகளில்
கவசம் வேண்டாம்

திறந்த வெளியில்
ஒரு வாழ்க்கை வேண்டும்.
//

நீ கேட்கும் வாழ்க்கை உனக்கு கிடைக்கும் குழந்தை.

காத்திரு அதிக நாட்கள் இல்லை விரைவில் கிடைக்கும்.

Unknown said...

கசக்கும் உண்மை..

Unknown said...

// நட்புடன் ஜமால் said...

ரொம்ப வேதனையா இருக்கு ...

வேறு ஒன்றும் செய்யவோ/சொல்லவதற்கோ இப்போதைக்கு இல்லை //




வேதனைதான் தோழரே....!! வருகைக்கு நன்றி.....

Unknown said...

// நாமக்கல் சிபி said...

:(

யதார்த்தத்தை நல்லா சொல்லி இருக்கீங்க! //



நான் அன்றாடும் பல இடங்களில் கண்ட வெளிப்பாடு இது...!!

நன்றிங்க அண்ணா....!!!

Unknown said...

// ஜீவன் said...

இந்திய தேசிய கொடியை விற்பனை செய்யும்
இந்தியாவின் குழந்தை தொழிலாளி !

நச்!! //





நன்றிங்க தோழரே....!!!

Unknown said...

/// பட்டிக்காட்டான்.. said...

கசக்கும் உண்மை.. //



ஆமாங்க தோழரே.... உண்மையிலும் உண்மை....!! வருகைக்கு நன்றி.........

Unknown said...

/// RAMYA said...

இதயம் கனக்கின்றது கண்கள் பனிக்கின்றன.

பிஞ்சு உள்ளத்தின் நெஞ்சில் உள்ள உணர்வுகளை யாருமே உணரவில்லையே!

இவர்களுக்குத்தான் என்ன செய்வது
என்ன சொல்வது என்று தெரியலை, புரியலை :(( ///




ஆமாங்க சகோதரி......!! நம் நாட்டில்தான் இந்தக் கொடுமை ... பெருமளவு நடக்கின்றது....!!!!


வருகைக்கு நன்றிங்க சகோதரி.....!!!!

Anonymous said...

பார்க்கவும் படிக்கவும் ரொம்ப கஷ்ட்டமாயிருக்கு அண்ணா.

Unknown said...

// லவ்லிகர்ல் said...

பார்க்கவும் படிக்கவும் ரொம்ப கஷ்ட்டமாயிருக்கு அண்ணா. //



ஆமா தங்கச்சி..... ரொம்பா வேதனையா இருக்கு......


கருத்துக்கு நன்றி தங்கச்சி.........

ஹேமா said...

லவ் மேடி,நிறைய ஹைகூக் கவிதைகள் எழுதியிருக்கிறிங்க.
நல்லாயிருக்கு.ரசிச்சுப் படிச்சேன்.

குழந்தைத் தொழிலாளர் பத்தின கவிதை சமூகக் கண்ணோட்டதோடு ஒரு விழிப்புணர்வைத் தரும் கவிதையாக இருக்குகிறது.
உண்மையில் வெளிநாடுகளில் வளரும் பிள்ளைகளைப் பார்க்கும்போது பொறாமையாகவும் இருக்கு.அவ்வளவு வசதியாக வாழ்கிறார்கள்.

அந்தக் கவிதையில் இறுதியில் இணத்திருக்கும் படத்தில் அந்தச் சிறுமியின் புன்னகை அலங்காரம் செய்யப்படாமல் எவ்வளவு அழகு.
தன் நாட்டின் கொடியைப் பிடித்திருப்பதாலோ என்னவோ!

Unknown said...

// ஹேமா said... //


// லவ் மேடி,நிறைய ஹைகூக் கவிதைகள் எழுதியிருக்கிறிங்க.
நல்லாயிருக்கு.ரசிச்சுப் படிச்சேன். //



ரொம்ப நன்றிங்க....!!!




// உண்மையில் வெளிநாடுகளில் வளரும் பிள்ளைகளைப் பார்க்கும்போது பொறாமையாகவும் இருக்கு.அவ்வளவு வசதியாக வாழ்கிறார்கள். //


ஆமாம்ங்க ... வெளிநாட்டுல கொத்தடிமையா வேலை செய்ய கூட இங்கிருந்து குழந்தைகள கடத்துரானாக.... அது இன்னும் கொடுமை....!!!





// சிறுமியின் புன்னகை அலங்காரம் செய்யப்படாமல் எவ்வளவு அழகு.
தன் நாட்டின் கொடியைப் பிடித்திருப்பதாலோ என்னவோ! //



ஆமாங்க.... எல்லோரையும் கவர்ந்த படம் அது.....




உங்கள் வருகைக்கு நன்றி........

நாஞ்சில் நாதம் said...

ரொம்ப வேதனையா இருக்கு பாஸ்

Unknown said...

// நாஞ்சில் நாதம் said...

ரொம்ப வேதனையா இருக்கு பாஸ் //




ஆமாங்க தோழரே....!!!


உங்கள் வருகைக்கு நன்றி....!!

விஜயகுமார் said...

திரு. லவ்டேல் மேடி அவர்களே..
தயவு செய்து மற்றவரின் கவிதை நூலில் இருந்து
கவிதைகளை எடுத்து பதிவு செய்யவேண்டாம்.
இந்த கவிதை அனைத்தும் கவிஞர் திரு.மணிவசந்தம்
என்பவர் “ மின்னல் கொடிகள்” என்ற கவிதை நூலில்
2003 ஆண்டு வெளியிடப்பட்டது..
இந்த புத்தகத்திற்கு திரு.அறிவுமதி (திரைப்பட பாடலாசிரியர்) அனிந்துரை எழுதி உள்ளார்.
மற்றவரின் பாராட்டை பெற உங்கள் திறமையை வெளிப்ப்டுத்துங்கள்..

விஜயகுமார் said...

திரு. லவ்டேல் மேடி அவர்களே..
தயவு செய்து மற்றவரின் கவிதை நூலில் இருந்து
கவிதைகளை எடுத்து பதிவு செய்யவேண்டாம்.
இந்த கவிதை அனைத்தும் கவிஞர் திரு.மணிவசந்தம்
என்பவர் “ மின்னல் கொடிகள்” என்ற கவிதை நூலில்
2003 ஆண்டு வெளியிடப்பட்டது..
இந்த புத்தகத்திற்கு திரு.அறிவுமதி (திரைப்பட பாடலாசிரியர்) அனிந்துரை எழுதி உள்ளார்.
மற்றவரின் பாராட்டை பெற உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள்..
உங்களோடு சேர்ந்து மற்றவரையும் ஏமாற்றுவது மிகவும் கொடுமையானது..