லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Saturday, July 11, 2009

அண்ணன் நாமக்கல் சிபி அவர்களுக்கு ஒரு பகீரங்க கடிதம்....

அண்ணன் நாமக்கல் சிபி அவர்களுக்கு ஒரு பகீரங்க கடிதம்....அண்ணா நான் உங்களின் தீவிர ரசிகன் ......!!! உங்களின் எழுத்துக்களை தவறாது வாசித்து வருகிறேன் . உங்களின் வலைப்பூவின் தீவிர ரசிகன் நான்.....!! நீங்கள் என் குரு நாதர் போல ...!! உங்கள் வலைப்பூவைப் படித்து ... அதன் ஆர்வத்தில் நான் தொடங்கியதே லவ்டேல் மேடி என்கின்ற என் வலைப்பூ .

உங்கள் வலைப் பூக்களிலே எனக்கு மிகவும் பிடித்த வலைப்பூ
" நயன்தாரா " தான் .ஆனால் மாறாக நீங்கள் சிறிது காலமாக என் பின்னூட்டங்களுக்கு சரியான மறு பின்னூட்டங்கள் இடுவதில்லை...!!!


எனக்குத் தெரியும் , இது நீங்கலாக செய்யவில்லை என்று. என்னைப் பற்றி உங்களுக்கு தவறான இன்பர்மேசன் குடுத்துக் கொண்டிருக்கும் ஆளையும் எனக்குத் தெரியும்.


அந்த பதிவர் கொஞ்சம் காலமாக இதே வேலையாகத் தான் சுற்றிக்கொண்டிருக்கிறார்...!!அவர் வேறு யாருமில்லை . பிரபல வலைப் பதிவர் " வால் பையன் " தான் என்பதை இந்த பதிவின் மூலம் நான் பகீரங்கமாக தெரிவித்துக் கொள்கிறேன்.!!


அவரும் என் சக தோழரே. ஆனால் அவர் எதற்காக இதையெல்லாம் செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை...!!வால் பையன் அவர்கள் எதற்காக இந்த சிண்டு முடிப்பில் ஈடு படுகிறார் என்று எனக்கு அவர் கூறியே ஆகவேண்டும்.


ஒரு சில இடங்களில் நீங்கள் என்னை கண்ணா .. பின்னாவென்று திட்டியுள்ளீர்கள். அதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன். எனக்கு ஒரு சகோதரர் இருந்தால் , இப்படி திட்டி புத்திமதி சொல்லுவார்கள் அல்லவா....!!வால் பையன் அவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொண்டு என் உரையை முடிக்கின்றேன்.இங்ஙனம் ,


லவ்டேல் மேடி .......


19 comments:

மகேஷ் said...

நியாயமான ஆதங்கம்! நீங்கள் போராடுங்கள் மேடி. நாங்கள் உங்கள் பக்கம் தான்!

சந்ரு said...

அமா நம்ம வால்பையன ஏன் திட்டுறிங்க.....

லவ்டேல் மேடி said...

// மகேஷ் said...

நியாயமான ஆதங்கம்! நீங்கள் போராடுங்கள் மேடி. நாங்கள் உங்கள் பக்கம் தான்! //அஃக ..... அஃக ..... !! யாரங்கே...!!! நம் கட்சிக்கு ஒரு " கோ . ப . செ " கிடைத்துவிட்டார்....!! அவர் எந்த ஜில்லாவில் இருந்தாலும் அள்ளிக் கொண்டு வாருங்கள் லகுட பாண்டிகளா....!!!!

லவ்டேல் மேடி said...

// சந்ரு said...

அமா நம்ம வால்பையன ஏன் திட்டுறிங்க..... ///இதுல இருந்து என்ன தெரியுது தோழரே......???நீங்க இன்னும் பதிவ முழுசா , தெளிவா படிக்கலீனு அர்த்தம்...!!!


ஒன்ஸ் மோர் உங்குளுக்கு டயம் தாரேன்.... மறுவடியும் படுசிட்டு வாங்க...!!!!!

நாமக்கல் சிபி said...

இங்கு நீங்கள் சொல்லி இருக்கும் விஷயங்களை தனிமடலில் சொல்லி இருந்திருக்கலாம்! அல்லது என்னைத் தொலை பேசியில் அழைத்துப் பேசியிருக்கலாம்!

தேவையில்லாமல் இன்னொரு பதிவரையும் இதில் இழுத்து விட்டுள்ளீர்கள்!

எனது கண்டனத்தை இங்கே பதிவு செய்வதுடன், நீர் போடும் ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் பதில் பின்னூட்டங்கள் போட்டுக் கொண்டிருக்கும் அளவுக்கு நான் உம்மைப் போல் வெட்டி வெங்காயமோ, தண்டச் சுண்ணாம்போ அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

லவ்டேல் மேடி said...

// நாமக்கல் சிபி said...

நீர் போடும் ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் பதில் பின்னூட்டங்கள் போட்டுக் கொண்டிருக்கும் அளவுக்கு நான் உம்மைப் போல் வெட்டி வெங்காயமோ, தண்டச் சுண்ணாம்போ அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்! //
உங்கள் வருகைக்கும் , நல் இடுகைக்கும் நன்றிங்க அண்ணே....!!

அ.மு.செய்யது said...

வால்பையன்,லவ்டேல்மேடி,நாமக்கல் சிபி மூன்று பேருக்கும் எனது கண்டனங்கள்.

ஏன்னாக்கா மூக்கு கொடப்பா இருந்தா இப்படி தான் யோசிக்க சொல்லுமாம்.

அ.மு.செய்யது said...

//சந்ரு said...
அமா நம்ம வால்பையன ஏன் திட்டுறிங்க.....
//

அப்ப தான சண்ட சூடு பிடிக்கும்..நாலு பேரு எதிர்த்து பதிவு போடுவாங்க...

லவ்டேல் மேடி said...

// அ.மு.செய்யது said...//


வா .. மச்சி ... வா..... !! ஆட்டைக்கு ஒரு ஆள் கொரையுதேன்னு நெனச்சேன்....!! வாண்டடா வந்து மாட்டிகினியா ....!!!

// வால்பையன்,லவ்டேல்மேடி,நாமக்கல் சிபி மூன்று பேருக்கும் எனது கண்டனங்கள்.//சும்மா வந்துகினு " கண்டனம் " .... . அப்டீனு கூவுனா .... நாங்க மெர்சல் ஆய்டுவுமா....??இங்க கண்டனம் வர சொல்லோ , மானிடர் ஒரு கோட்டார் குட்து ரெஜீச்டார் பண்ணும் மாமே.....!!!இல்லாங்காண்டி வால் பையன உட்டு எதிர் பதிவு போட் சொல்லோ ..... !! அப்பால பெஜாரா பூடும் மாமே......!!!!


இன்னா.....?? இன்னா சொல்ற .......???


//அப்ப தான சண்ட சூடு பிடிக்கும்..நாலு பேரு எதிர்த்து பதிவு போடுவாங்க... //நால் பேர் இல்ல மாமே.... நானூறு பேர் ......!!!!


// ஏன்னாக்கா மூக்கு கொடப்பா இருந்தா இப்படி தான் யோசிக்க சொல்லுமாம். //
அத்தே கொட்பா இல்லே மாமே ...... பொட்பா...... !! அல்லார்த்துக்கும் நோசு பொப்பா கீது.....!!!


அட்த தபா வர்சொல்லோ.... சோக்கா பின்னூட்டம் போட் மாமே....!!! இல்லாங்காண்டி இஸ்கூலு கொய்ந்த ' ன்னு சொல்லீருவாங்கோ....!!!வர்ட்டா மாமே ......!!எ.... வேர் இஸ் தி பார்டி ......


மாமே ஊட்டாண்ட பார்டி...... "

வால்பையன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

ஏன் இப்படி!?

எதாயிருந்தாலும் பேசி தீர்த்திருக்கலாமே!

அடுத்த தடவை உங்க சரக்கை எடுத்து குடிக்க மாட்டேன்! உங்க சைடிஷை எடுத்து சாப்பிட மாட்டேன் ஏற்கனவே நடந்ததுக்கு மாப்பு கேட்டுக்கிறேன்!

வாங்க மப்பு போடலாம்!

வால்பையன் said...

//நீர் போடும் ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் பதில் பின்னூட்டங்கள் போட்டுக் கொண்டிருக்கும் அளவுக்கு நான் உம்மைப் போல் வெட்டி வெங்காயமோ, தண்டச் சுண்ணாம்போ அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்!//


பதிலுக்கு பதில் பின்னூட்டம் போடுபவர்களை, ”வெட்டி வெங்காயம்”, ”தண்டச் சுண்ணாம்பு” என்று திட்டும் மாநக்கல் சிபி அவர்களுக்கு பின்னூட விரும்பிகள் சார்பாக எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்!

மகேஷ் said...

இன்னும் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன் மாம்ஸ்!

லவ்டேல் மேடி said...
This comment has been removed by the author.
சப்ராஸ் அபூ பக்கர் said...

இங்கே என்ன நடக்கிறது?... என் அரண்மனைக் காவலர்களை வரச் சொல்... அவர்கள் தான் வெட்டிப் பயல்கள்..... வெட்டி வேலைக்குச் சிறந்தவர்கள்.... (இப்படியும் பின்னூட்டல் இடலாமோ?.... அய்...... அய்...... அய்.... கொய்யாங்கோ... கொய்யாங்கோ... லொள்.....)

லவ்டேல் மேடி said...

@ வால்பையன் ,


உங்கள் வருகைக்கும் , சப்ப இடுகைக்கும் , மொக்கை கண்டனத்திருக்கும் ... என் மனமார்ந்த நன்றிகள்.....

லவ்டேல் மேடி said...

// மகேஷ் said...

இன்னும் உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன் மாம்ஸ்! //இதுக்குமேல நெறையா முக்குனா வாந்திதாண்டா வரும் மாப்ள.....!!!!!

லவ்டேல் மேடி said...

// சப்ராஸ் அபூ பக்கர் said...

இங்கே என்ன நடக்கிறது?... என் அரண்மனைக் காவலர்களை வரச் சொல்... அவர்கள் தான் வெட்டிப் பயல்கள்..... வெட்டி வேலைக்குச் சிறந்தவர்கள்.... (இப்படியும் பின்னூட்டல் இடலாமோ?.... அய்...... அய்...... அய்.... கொய்யாங்கோ... கொய்யாங்கோ... லொள்.....) //அய்யய்யோ .... என்னாச்சு உங்குளுக்கு........??? ஆஆவ்வ்வ்வ்வ்.....!!!!!

பட்டிக்காட்டான்.. said...

இப்படியும் கிளம்பி இருக்கீங்களா..??

நடத்துங்க..

லவ்டேல் மேடி said...

// பட்டிக்காட்டான்.. said...

இப்படியும் கிளம்பி இருக்கீங்களா..??

நடத்துங்க.. //என்ன பண்றது தோழரே...... ! நாமுளும் எப்போ பிரபலம் ஆவறது..... அதுக்காகத்தான்.... சும்மா ஒரு விளம்பரம்......!!!