லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Friday, July 10, 2009

அவன் பெயர் ........

அவன் பெயர் ........




இந்த பதிவினை படிக்கும் முன் என் மாப்பி கதைய படுசிட்டு வாங்க....




காட்சி - 1 :



வெள்ளி மாலை 3 மணி ....

அந்த பண்மாடி கண்ணாடி அடுக்கு மாளிகையின் மூன்றாம் தளத்தில் உள்ள HCL டெக்னாலஜீசில் மெயின் பிரேம் டெவலப்பராக பணி புரியும் கொத்தவாசவாடி கோயிந்தம்மா அலுவலகத்தில் தன் கணிணியை சுவாரஸ்யமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் தோழி கும்முடிபூண்டி குசல மேரி அழைத்தாள்.





"ஏய் கய்ய்த , இன்னா ... இன்க்கி போலாமா .....?? " என்றாள் குசல மேரி .




"ஏய் சப்ப .... மெய்யால்மா கூவுற ..... ?? " நம்ப முடியாமல் கேட்டாள் கோயிந்தம்மா .




"அடீங்க ... மெய்யால்ந்தாண்டி..... வெர்சா ஜகா வாங்கிகின்னு வா ... " என்று சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தாள் குசல மேரி .





கோயிந்தம்மாவுக்கு பரபரப்புத் தொற்றிக்கொண்டது. எத்தனையோ முறை அவனைப் பற்றி சிலாகித்துக் கூறியிருகின்றாள் குசல மேரி . அனுபவங்களைக் கதை கதையாய் சொல்லியிருக்கிறாள். ஆனால் ஒருமுறை கூட கொத்தவாசவாடி கோயிந்தம்மாவை அழைத்துச் சென்றதில்லை.




இதை வேறு யாரிடமும் கேட்கவும் தயக்கமாயிருந்தது.
கோயிந்தம்மா மட்டும் தான் பாக்கி. தோழிகள் எல்லோரும் ஏற்கெனவே... விடுங்கள் அது எதற்கு இப்போது? ஒரு வழியாக இன்றைக்குத் அம்மணிக்கு மனம் இறங்கியிருக்கிறது. அது போதாதா?





=====================================


காட்சி - 2 :



ஆறரைக்கெல்லாம் அறையில் தயாராக இருந்தாள் கோயிந்தம்மா .



குசல மேரி வந்தாள். "இன்னாடி போலாமா?"



"போலாண்டி " உடனே சொன்னாள் கோயிந்தம்மா .




கோயிந்தம்மா உடுப்பைப் பார்த்தவள் நகைத்தாள் குசல மேரி .




"இன்னாடி இப்டி ட்ரெஸ் பன்னிக்கீர ? அங்க போற(து)க்கு எல்லாம் ஒரு தனி சோக்கான ட்ரெஸ்
கீதுடி " என்றாள்.



அவள் அறிவுரையின் படி தயாரானாள் கோயிந்தம்மா .




=============================================



காட்சி - 3
:



போகும் வழியில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்னவெல்லாம் செய்யக் கூடாது என்று விலாவாரியாக வகுப்பெடுத்தாள் குசல மேரி .
கோயிந்தம்மாவும் பவ்யத்துடன் கேட்டுக்கொண்டாள் .




இடம் நெருங்க நெருங்க பரபரப்பு கூடியது .
அதே சமயம் "இன்றைக்கே அவசியமா?" என்றும் தோன்றியது. "சரி, என்னதான் நடக்கிறது என்று பார்ப்போமே!" என்ற அசட்டு தைரியம் உந்தித் தள்ளியது கோயிந்தம்மாவிர்க்கு .



===================================


காட்சி - 4
:



இருவரும் உள்ளே நுழைந்தனர் . ஒரு மார்க்கமான வெளிச்சம் வரவேற்றது.



"சரி தான், இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் இப்படிப்பட்ட வெளிச்சம் தான் சரி போல" என்று தோன்றியது கோயிந்தம்மாவிர்க்கு .




அருகில் வந்து நின்ற நபரிடம் , அவன் பெயரைச் சொன்னா
ள் குசலமேரி . புதுப்பழக்கம் அல்லவா? அதனால் கோயிந்தம்மா அமைதியாக அமர்ந்திருந்தாள் .




சிறிது நேரத்தில் அவன் வந்தான். சிக்கென்று கச்சிதமாக, அழகாக, செக்ஸியாக , கட்டுடலுடன் ...



=================================



காட்சி - 5
:




எல்லாம் முடிந்து வெகுநேரம் கழித்து வெளியே வந்தார்கள் இருவரும் .




"சூப்பருடி " செம மஜாவா இருந்துதுடி " என்றாள் கோயிந்தம்மா .




" செம சோக்கா கீரான்ல ? அத்தா .. துட்டு எவ்ளோ செல்வானாலும் நோ ப்ராப்ளம்னு இங்க வரேன்" என்றாள் குசல மேரி .




உற்சாகத்தில் என்னென்னவோ பேசிக்கொண்டு பார்க்கிங்கை நோக்கி நடந்தார்கள் இருவரும் .




======================================





ம்...... சொல்ல மறந்துவிட்டேனே, அவன் பெயர்.......... நெப்போலியன் !









இங்ஙனம் ,


லவ்டேல் மேடி.......

14 comments:

நாஞ்சில் நாதம் said...

:)))

சிநேகிதன் அக்பர் said...

ஏன் இப்ப‌டி.. ஏண்ணே இப்ப‌டி.

Unknown said...

@ நாஞ்சில் நாதம் ,

வருகைக்கு நன்றி ....






@ அக்பர் ,

சும்மா ஒரு விளம்பரம்......

RAMYA said...

ஒன்னும் சொல்லிக்கற மாதிரி இல்லே
ம்ம்ம் நடகட்டும் நடகட்டும் :)

RAMYA said...

//
ம்...... சொல்ல மறந்துவிட்டேனே, அவன் பெயர்.......... நெப்போலியன் !
//


ஒரே குழப்பமா போய்டுச்சு
இப்போதான் புரிந்தது.

அது சரி .......... :))

thamizhparavai said...

அடப்பாவிங்களா,,, தம்பி ஒழுங்கா ஒரு மேட்டர் எழுதக் கூடாதே... உடன ஒரு எதிர்பதிவு போட்டு அவனையும் பிரபலம் ஆக்கிடுவீங்களே...

மத்தபடி பதிவு செம நக்கல்....
குசலமேரி...எங்கய்யா பிடிச்சீர் இந்த ஆளை.. சாரி.. இந்தப் பேரை...

thamizhparavai said...

பதிவுக்கும், ப்ரொஃபைல் போட்டோவுக்கும் சம்பந்தமே இல்லையே...?!

Unknown said...

// RAMYA said...

ஒன்னும் சொல்லிக்கற மாதிரி இல்லே
ம்ம்ம் நடகட்டும் நடகட்டும் :) //


ஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................!!!!!

Unknown said...

// //
ம்...... சொல்ல மறந்துவிட்டேனே, அவன் பெயர்.......... நெப்போலியன் !
//


ஒரே குழப்பமா போய்டுச்சு
இப்போதான் புரிந்தது.

அது சரி .......... :)) //



நன்றிங்க சேச்சி ....!!!

Unknown said...

// தமிழ்ப்பறவை said...

அடப்பாவிங்களா,,, தம்பி ஒழுங்கா ஒரு மேட்டர் எழுதக் கூடாதே... உடன ஒரு எதிர்பதிவு போட்டு அவனையும் பிரபலம் ஆக்கிடுவீங்களே...

மத்தபடி பதிவு செம நக்கல்....
குசலமேரி...எங்கய்யா பிடிச்சீர் இந்த ஆளை.. சாரி.. இந்தப் பேரை... //




// அடப்பாவிங்களா,,, //


அடப்பாவிங்களா இல்ல...... அடப்பாவி.......





// தம்பி ஒழுங்கா ஒரு மேட்டர் எழுதக் கூடாதே... //


ஐயா டமில் பேர்ட் , எது ஒழுக்கமான பதிவு.....??





// உடன ஒரு எதிர்பதிவு போட்டு அவனையும் பிரபலம் ஆக்கிடுவீங்களே //



அவன்தான் என்கிட்ட வந்து கேட்டான்......!! " அண்ணே ... அண்ணே.... எனக்கு ஒரு பப்ப்ளிசிடி வேணுமின்னு....."


வாட் கேன் ஐ டூ..... ??? சில்வண்டுப் பய்யன் கேக்கும்போது வேணாமின்னா சொல்ல முடியும் ......!!!! பொக்குனு போயிருவான்ல......!!!







// மத்தபடி பதிவு செம நக்கல்.... //



நெம்ப தேங்க்ஸ்ங்ண்னோவ் .......





// குசலமேரி...எங்கய்யா பிடிச்சீர் இந்த ஆளை.. சாரி.. இந்தப் பேரை.. //



இப்புடி ஆர்வமா கேக்குறத பாத்தா... மகேஷ் பதிவுல குசல மேரி கேரக்டர் நீங்கதான் போல.....!! ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்......!!!





// பதிவுக்கும், ப்ரொஃபைல் போட்டோவுக்கும் சம்பந்தமே இல்லையே...?! //


நோ...... எப்பவுமே தப்பு கணக்கு போடப்பிடாது....!!


யூ நோ ஐ ஆம் வெறி இன்னசன்ட் பாய் ( பைய்யன் ) .... !!!!!!!

மகேஷ் : ரசிகன் said...

என்னா வில்லத்தனம்?

Unknown said...

// மகேஷ் said...

என்னா வில்லத்தனம்? //




வாங்க கோயிந்தம்மா.... அட ..... த்து..... மன்னிக்கவும் .... !! வாங்க மகேஷ்...!!


உங்கள் வருகைக்கும் , இடுகைக்கும் என் நன்றி ...!! உங்களைப் போன்ற ஜாம்பவான் பதிவர்களின் ஆதரவு எனக்கு என்றும் தேவை...!!!! உங்கள் வருகை எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது....!!!!

Joe said...

அடடா, அடடா, என்ன ஒரு twist கடைசி வரியில?

Unknown said...

// Joe said...

அடடா, அடடா, என்ன ஒரு twist கடைசி வரியில? //



வருகைக்கு ரொம்ப நன்றிங்க ...!!

இது எதிர் பதிவு....!! மெயின் பதிவை விட டுவிஸ்ட்டு கொஞ்சம் அதிகமா இருக்க ட்ரை பண்ணுனேன்.....!!!!