லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Monday, July 6, 2009

என்னை தாக்கிய ஆட்கொல்லி நோய் 32




என்னை தாக்கிய ஆட்கொல்லி நோய் 32



என்னைய இந்த நெலமைக்கு ஆளாக்கி .... ஆட்கொல்லி நோய் 32 வைரஸ்ஸ பரப்பிய மாப்ள மகேஷ் ... க்கு எம்பட... ( உனக்கு ஏன் எம்மேல இத்தன கொல வெறி... ) மிக்க நன்றியை கூறிவிட்டு.... இடை விடாது பணிகளுக்கிடையே இந்த எழுத்துப் பணியை துவங்குகிறேன்.......!!!



1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?


எங்க நைனாவுக்கு கர்நாடகாவுல இருக்குற மலை மாதேஸ்வரன் கோவில்னா நெம்ப இஷ்டம் ....!!! அதுனால எனக்கு இந்த பேரு வந்துச்சு...!!!


ஆக்சுவலா.... மாதவனும் நானும் ப்ரெண்ட்ஸ்.... !! அவுனுக்கு இந்த பேரு ரொம்ப புடிக்கும்... !! அவன் அடிக்கடி என்கிட்ட கேப்பான் ... பேர மாத்திகலாமின்னு..... பட் நா நோ சொல்லீருவேன்...!! அதுக்கப்புறம் அவன் குப்புற படுத்துகிட்டு கதறி அழுவான் பாருங்க..... ஹ. ஹ ..ஹ.....
ச்சோ ச்சுவீட்.....!!!!




2) கடைசியா அழுதது எப்போது?

ரெண்டு நாளைக்கு முன்னாடி..... !! சளி புடுச்சிருக்குனு நண்டு கொளம்பு தின்னேன்....!! அதுக்கப்புறம் ... ரெண்டு நாளா ககூச்ஸ்ல ஒரே அலுவாச்சிதான்...!!!!!



3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?



கஷ்ட காலம்........!!




4) பிடித்த மதிய உணவு?



ஒயிட் ரைஸ் வித் கொள்ளு சட்னி ... அதுவும் எங்க மம்மி செஞ்சது.....!!!





5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா?



தள வெச்சு கோடா படுக்க மாட்டேன்.....!!!! எங்க மம்மி அடிக்கடி சொல்லுவாங்க.... நல்லவிங்களோட மட்டும் ப்ரெ
ன்ஸிப் வெச்சுக்கோனு ....!!





6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?



குட் கொஸ்டீன்......!! ஐ அப்ரிசெட் யூ...!!



எனக்கு குளிக்கவே புடிக்காது....!!!!





7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?



இவங்கிட்ட காசு எவ்வளவு தேருமின்னு....!!!!





8) உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விசயம் என்ன? பிடிக்காத விசயம் என்ன?



புடுச்ச விசியம் : காத கடுச்சு துப்பர அளவுக்கு மொக்க போடறது....!!!


புடிக்காத விஷயம் : நா மொக்க போட்டுக்கிட்டு இருக்கும்போது யாராவது பாதியில எந்திருச்சு போவது...!!






9)உங்கள் துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?




டிசம்பர் மாசத்துக்கு அப்பறமா இத கேள்விக்கு நா பதில் சொல்லுறேன்...!!!





10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?




என் நைனா அண்ட் மம்மி.....!!! அப்ப அப்போ ... பாக்கிட் மணி கெடைக்கும்....!!!






11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?



கருப்பு நிற சே குவேரா டி-ஷர்ட்டும் , சந்தன நிற நைட் பேண்ட்டும்....!!!






12) என்ன பாட்டு /கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?


கொஞ்ச நாளாவே " குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்லநாள் " ,
"முத்துமணி.. மால... " , அப்புறம் ஆயிரத்தில் ஒருவன் படத்துல " நெல் ஆடிய வயலெங்கெ......."






13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?



ஒய் ப்லட்.... சேம் ப்லட்.....!!

" கருப்புதான் எனக்கு புடுச்ச கலரு...."




14) பிடித்த மணம்?



" சந்தனம்...." ...!! யாருப்பா அது...?? ஓமனக்குட்டி சேச்சிய இந்த எடத்துல
ஞ்யாபகப்படுத்துறது ....






15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவர்களிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்?


அட .... ஆணியப் புடுங்க வேண்டாமுங்க......!!!!





16) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?




( கம்முனாட்டி ... கையுக்கு ஒருநாளைக்காவது சிக்காமையா போயிருவ ....)

நெம்ப க்ளோஸ் ப்ரெண்டு அவுரு...!! நெம்ப நல்ல டைப்புங்க....!! வல்லவருங்க....!! ம்ம்ம்... !! நல்லவருங்க...!!!! ஆனா ..... சொல்லிக்கிற மாதிரி அவுரு ஒன்னும் எழுதுலிங்க .....!!!!





17) பிடித்த விளையாட்டு?



சானியா அக்கா ... வெலாடுற வெளாட்டு....!!






18) கண்ணாடி அணிபவரா?


ச்ச... ச்ச..... நானு இன்னுமும் யூத்து.....!!!!!








19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?



ஈரான் நாட்டு திரைப்படம் நெம்ப புடிக்கும்.......!! அப்புறம் தலைவி ............... படம்.....!!!!






20) கடைசியாகப் பார்த்த படம்?



பெஞ்சமின் பட்டன்






21) பிடித்த பருவ காலம் எது?


குளுரு காலம்...!! எவ்வளவுதான் சரக்கடுச்சாலும் கும்முன்னு இருக்கும்.....!!!!





22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?


படுச்சு முடுச்சது : தலைவர் வா.மு.கோமு எழுதிய " கள்ளி ".



படுச்சுகிட்டு இருக்குறது : மருதன் எழுதிய " தலைவர் சே குவேராவின் வேண்டும் விடுதலை "





23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?


படம் இருந்தாதான மாத்துறதுக்கு...... !! படம் வெச்சுக்கும் பழக்கம் இல்ல....





24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?



புடுச்ச சத்தம் : புல்லாங்குழல் .


புடிக்காத சத்தம் : எதுவுமில்லை .




25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?


குழுமனாளி , டார்ஜ்ளிங்







26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?




எவனாவது இலுச்சவாயன் கெடச்சானா ... மொக்கைய போட்டு அவன் மண்டைய கழுவுறது....!!!!





27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?


இன வெறி....







28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?



நானே சைத்தான்...... அப்புறம்.......




29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?



ஊட்டி .... நாலு வருசமா இன்ஜினியரிங் படிக்குறேங்குற பேருல குப்ப கொட்டுன அருமையான ஊர் .......!!






30) எப்படி இருக்கணும்னு ஆசை?


இப்புடியே இருந்தா போதும் ..........!!!








31) மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?


கண்ணாலத்துக்கு அப்புறம் யோசிக்க வேண்டிய விசியம்......





32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க.



வாழ்ந்து காட்டுவோம்.......!!





வாழ்க வளமுடன்......!!!!!








இங்ஙனம் , லவ்டேல் மேடி........



20 comments:

மகேஷ் : ரசிகன் said...

இதுல நான் தனியா எங்க கலாய்க்கறது ? Anyway that was a good interview!

Unknown said...

நெம்ப தேங்க்ஸ் மாப்பு.......!!!!!!

ராமலக்ஷ்மி said...

எல்லாப் பதில்களும் சரவெடி:)!

வாழ்வு பற்றிய வரி...அசத்தல் மேடி. இதுவரை நான் படித்த எத்தனையோ 32-ல் ஒருவரும் சொல்லாதது.

வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

இன்றைய என் பதிவில் நீங்கள் எழுப்பியக் கேள்விக்கு விளக்கத்துடன் நின்றிடாமல் கவிதையிலும் திருத்தம் செய்துவிட்டேன், நன்றி மேடி!

Unknown said...

// ராமலக்ஷ்மி said...

எல்லாப் பதில்களும் சரவெடி:)!

வாழ்வு பற்றிய வரி...அசத்தல் மேடி. இதுவரை நான் படித்த எத்தனையோ 32-ல் ஒருவரும் சொல்லாதது.

வாழ்த்துக்கள்! ///



ரொம்ப நன்றிங்க சகோதரி.....!!!

Unknown said...

// ராமலக்ஷ்மி said...

இன்றைய என் பதிவில் நீங்கள் எழுப்பியக் கேள்விக்கு விளக்கத்துடன் நின்றிடாமல் கவிதையிலும் திருத்தம் செய்துவிட்டேன், நன்றி மேடி! //






ஆம் சகோதரி....!! கவிதையை வாசித்தேன்..... கவிதையை மிகவும் தெளிவாகவும் , அழகாகவும் மெருகேற்றியுள்ளீர்கள் ...!!! அருமையாக உள்ளது....!!!!


நன்றிங்க சகோதரி...!!!

Anonymous said...

இது என்ன அண்ணா.

கேள்விகளும் பதிலும்.

Unknown said...

// லவ்லிகர்ல் said...

இது என்ன அண்ணா.

கேள்விகளும் பதிலும். ///


ஹ... ஹ .. ஹா.....!! அது ஒண்ணுமில்ல தங்கச்சி.....!!! ஊரெல்லாம் பன்றி காய்ச்சல் பரவுன மாதிரி.... !! பதிவர்களிடையே பரவுன வைரஸ் கேள்விகள் ....!! இந்த 32 கேள்விகள் மாறி... மாறி ஒவ்வொரு பதிவராக கேட்டுக் கொள்வார்கள்.....!! இதை மகேஷ் என்கின்ற பதிவர் எனக்கு அனுப்பினார்....!! மகேஷுக்கு தமிழ் பறவை என்ற பதிவர் அனுப்பினார்....!!


நா யாரையும் கேட்கக் கூடாதுன்னு நெனச்சேன்....!! " எனக்கு ஒரு அடிம சிக்கீட்டாண்டா " ன்குற மாதிரி .... இப்போ நீ மாட்டிகிட்ட....!!

இந்த 32 கேள்விகளையும் நான் உன்னை கேட்கிறேன் ...... , நீ உன் வலை தளத்தில் இதற்க்கு உன் இஷ்டம்போல் பதில் சொல்லு ...... யுவர் சாயிஸ் ...!!!

புரியவில்லை என்றால் ஒருமுறை என் பதிவை நன்றாக படித்துக்கொள்.....!!! வாழ்த்துக்கள்.....!!!!!

க.பாலாசி said...

//டிசம்பர் மாசத்துக்கு அப்பறமா இத கேள்விக்கு நா பதில் சொல்லுறேன்...!!//

ஏனுங்ணா இந்த ஆசவேற உங்களுக்கு இருக்குமாட்றுக்கே.. ஆரு அந்த பயபுள்ள...ரொம்ப கஷ்டம்தான்.

Unknown said...

// பாலாஜி said...

ஏனுங்ணா இந்த ஆசவேற உங்களுக்கு இருக்குமாட்றுக்கே.. ஆரு அந்த பயபுள்ள...ரொம்ப கஷ்டம்தான். ///


வாங்க ஈரோட்டுகார தம்பி...!! உங்கள் முதல் வருகைக்கு நன்றி...!! எனக்கு நவம்பரில் திருமணம்.... அதுனாலதான் அப்படி சொன்னேன்....!!! சந்தேகம் தீந்துச்சா....??

நாஞ்சில் நாதம் said...

வாழ்க வளமுடன்......!!!!!

சிநேகிதன் அக்பர் said...

//வாழ்ந்து காட்டுவோம்.......!!//

சரியா சொன்னீங்க.

வால்பையன் said...

//நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா?

தள வெச்சு கோடா படுக்க மாட்டேன்.....!!!! எங்க மம்மி அடிக்கடி சொல்லுவாங்க.... நல்லவிங்களோட மட்டும் ப்ரென்ஸிப் வெச்சுக்கோனு ....!! //

எங்கம்மா அப்படி சொல்லாம விட்டு தான் நான் முழிச்சிகிட்டு இருக்கேன்!

வால்பையன் said...

//கடைசியாகப் பார்த்த படம்?
பெஞ்சமின் பட்டன்//

அந்த பட்டனை கொண்டாந்து கொடுங்க நான் இன்னும் பார்க்கல!

வால்பையன் said...

//என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

படுச்சு முடுச்சது : தலைவர் வா.மு.கோமு எழுதிய " கள்ளி ".//

அதையும் கொண்டுவாங்க தலைவா!

Unknown said...

// நாஞ்சில் நாதம் said...

வாழ்க வளமுடன்......!!!!! //


வாழ்த்துக்களுக்கு முதல் வருகைக்கும் நன்றி தோழரே....

Unknown said...

// அக்பர் said...

//வாழ்ந்து காட்டுவோம்.......!!//

சரியா சொன்னீங்க. ///


முதல் வருகைக்கும் , இடுகைக்கும் நன்றிங்க தோழரே......

Unknown said...

@ வால் பையன் ,


உங்கள் வருகைக்கும் , இடுகைக்கும் நன்றிங்க தலைவரே.......

ஹேமா said...

ஹலோ மேடி,பதிவுகள் பார்த்தேன்.குட்டிக் குட்டிக் கவிதைகள் அருமை.ரசித்தேன்.

உங்களைப் பற்றின தொடர்...ம்.

Unknown said...

// ஹேமா said...

ஹலோ மேடி,பதிவுகள் பார்த்தேன்.குட்டிக் குட்டிக் கவிதைகள் அருமை.ரசித்தேன்.

உங்களைப் பற்றின தொடர்...ம். //


நன்றிங்க ........!! உங்கள் வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சி ....!!!