லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Saturday, May 2, 2009

நான் கொடூரன் .....





நான் நேற்று சனிகிழமை விடுமுறை நிமித்தமாக திருச்சியிலிருந்து 6 மணியளவில் புறப்பட்டு எனது சொந்த ஊரான ஈரோட்டிற்கு அரசுப் பேருந்தில் வந்துகொண்டிருந்தேன் .


பேருந்து சற்று மித வேகத்துடன் கொல்லிட ஆற்றின் கரையோரமாக ரம்மியமான வருடும் தென்றலில், தொட்டிலில் தாலாட்டுவதுபோல் ஊர்ந்து வந்ததால் , நல்ல உறக்கம்.....
!!!



8 மணிக்கு பேருந்து நாமக்கல் அடைந்தவுடன் ..... எனக்கு அகோர பசி.... சாப்பிட்டு கொண்டிருந்தால் வீடு போய் சேரமுடியாது ..... , ஆதலால் உடனே பயணத்திருக்கு தயார் நிலையில் இருந்த ஈரோடு செல்லும் தனியார் பேருந்தில் ஏறினேன்.

ஷ்ஷ்ஷ்ஷ்ஸ்......!!!! அப்பப்பா ... !!! எப்படியோ கூட்டத்தில் உட்கார இடம் கிடைத்தது ., அடுத்த சில நிமிடங்களிலேயே உரக்க தேவதை என்னை மீண்டும் கட்டி அனைத்தாள்............
நன்றாக உறங்கினேன் .......



" சார் கொஞ்சம் தள்ளி உள்ள உக்காருங்க " என்ற கணீர் குரலால் தேவதை மாயமானாள் ....!!! கண்விழித்துப் பார்த்தல், ஒரு 4 அடி உயரம் கொண்ட 50 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் என்னருகே.... பேருந்தும் திருசெங்கோட்டை அடைந்திருந்தது , பேருந்தில் கூட்டமும் கூட... ,
சரி என்று , எனது இருக்கையில் சரியாக அமர்ந்தேன்....
!!


அந்த மனிதரை அடுத்து , ஒரு பெண்மணி திரும்பியவாறு நின்றுகொண்டிருந்தாள் , பேருந்து சிறிது தூரம் சென்றது... அந்த மனிதர் சிறிது நேரம் என்மீது சாய்ந்தவாறு நிற்பதும்... சிறுது நேரம் அந்த பெண்மணிமீது சாய்ந்தவாறு நிர்ப்பதுமாறு இருந்தார்.... , எனக்கு கோபம் ... கோபமாக வந்தது....... , என்ன்னடா இந்த மனுஷன்..... இவனெல்லாம் ஒரு பிறவியா.... கருமம்.... இதுக்கு இவுனுங்கெல்லாம் சாகலாம் என பல சாபங்கள் சபித்துக்கொண்டே வந்தேன்... !! ஒரு கட்டத்தில்... மனதளவில் இருந்த சாப மொழிகள் ... வாய் வரை வந்தது.. " ச்ச என்ன மனுசனுங்க..... சும்மா இடுச்சு நின்னுக்கிட்டு... நேரா நிக்க தெரியாது.... வயசாச்சின்னு நெனச்சா..." அப்படி கூறிவிட்டு ஜன்னல் பக்கம் திரும்பிக்கொண்டேன் . அந்த மனிதர் ஒன்னும் தெரியாத அப்பாவியாக என்னை பார்த்துவிட்டு .. தலையை குனிந்து கொண்டார்......!!!
சிறிது நேரத்தில் பள்ளிபாளையம் என்னும் ஊர் வந்தது... பேருந்து நின்றவுடன் 80% கூட்டம் குறைந்தது.... என்னை இடித்த மனிதர் இப்போ என்னை விட்டு தள்ளி நின்றார் ....!! நிம்மதியுடன் நான் திரும்பி அவரை பார்த்த பொழுது....... ஒரு பெரிய அதிர்ச்சி..... .. ஏனென்றால்...... !!???!!!


.

.


.


.


.




அவருடைய ஒரு கால் நல்ல முறையிலும் .. மற்றொரு கால் பலவீனமற்றும் இருந்தது.... அவர் ஒரு ஊனமுற்றவர்.... மேலும் அந்த பெண்மணி அவருடைய மனைவி.... அவர் சரிநிலையில் நிர்ப்பதர்க்காகவே எங்களை இடித்தவாரும், எங்கள் மீது சாய்ந்தவாரும் நின்றுகொண்டிருந்தார் என நான் யூகித்துக் கொண்டேன்.......!!!
ஒரு நொடி அப்படியே ஸ்தம்பித்துப் போனேன்... என்ன ஒரு கொடூரச் செயலை நான் செய்துவிட்டேன் .... அவருக்கு இருக்க இடமல்லவா நான் கொடுத்திருக்க வேண்டும்..... அதை விட்டுவிட்டு ..... கேவலமாக திட்டி விட்டோமே.....!!! நம்முள் இவ்வளவு பெரிய கொடூரன் உள்ளானா ..??? என பல கோணங்களில் என்னையே நான் சபித்தேன்....



தாமரை இலையில் ஒட்டா நீர் உருண்டோடுவதுபோல , என மனம் என் சரீரத்துள் ஒட்டாமல் அலைமோதியது..... அவரிடம் எப்படியாவது மன்னிப்பு கேட்ட்கவேண்டும்.... அப்பொழுதுதான் என் மனம் நிலையாகுமென முடிவெடுத்தேன்...



பேருந்து ஈரோடு பேருந்து நிலையத்தினுள் வந்து நிறுத்தப்பட்டது. எல்லோரும் பேருந்தை விட்டு கீழே இறங்குனார்கள் .... அவர் ஊனமுற்றவர் என்பதால் சற்று பொறுத்திருந்து இறங்கினார்.....


மனதை கணப்படுத்திக்கொண்டு அவரிடம் சென்றேன்,


" நான் : ஐயா ......


பெரியவர் : எண்ணுங்க தம்பி....



நான் : என்ன மன்னுச்சிருங்க.........




பெரியவர் : எதுக்குங்க தம்பி..........




நான் : இல்ல நான் உங்கள பஸ்சுல அப்பிடி மனசு நகரமாதிரி திட்டீருக்க கூடாது......



பெரியவர் : அட பரவாலீங்க தம்பி... தெரியாம தான திட்டீடிங்க..... உடுங்க தம்பி.......

( சிரித்த முகத்துடன் கூறியதால்)
என் மனம் லேசாகியது....... என் சரீரத்தினுள் லயித்தது......




நான் : சரிங்க போயிட்டு வரேன்........



பெரியவர் : சரீங்க தம்பி....... "


கொடூரன் அழிந்ததை நினைத்து சந்தோசத்துடன் வீடு வந்து உறங்கினேன்........







இங்ஙனம் ,



லவ்டேல் மேடி........

19 comments:

தமிழ் அமுதன் said...

;;)) கடவுள்!!!

ராமலக்ஷ்மி said...

அறியாமல் வந்து விழுந்த வார்த்தைகள் ஆயினும் தவறை உணர்ந்ததும் ஓடிச் சென்று மன்னிப்பு கேட்ட உங்களை கொடூரனாய் நினைக்க முடியவில்லையே. சரி எதையும் யோசித்து ஆராய்ந்து பேச வேண்டும் என்பதற்கு இது ஒரு பாடம் எல்லோருக்குமே.

கலாட்டா அம்மணி said...

அழகான வர்னனை..
வாழ்த்துக்கள்..

தவறே செய்யாதவன் கடவுள் ஆவான், தவற்றை உணர்பவனே மனிதனாகிறான்

Unknown said...

@ ஜீவன் ,

நல் வருகைக்கும் , நல் இடுகைக்கும் என் மனமார்ந்த நன்றி........




@ ராமலக்ஷ்மி ,


கண்டிப்பாக சகோதரி ..... வருகைக்கு என் மனமார்ந்த நன்றி ......




@ கலாட்டா அம்முனி ,


முதல் வருகைக்கும் , நல் இடுகைக்கும் என் மனமார்ந்த நன்றி ......

Unknown said...

// தவறே செய்யாதவன் கடவுள் ஆவான், தவற்றை உணர்பவனே மனிதனாகிறான் //



அருமை ......

RAMYA said...

எவ்வளவோ பேரு தப்பு செய்துட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி போவாங்க.

அவர்கள் முன்னால் நீங்கள் எவ்வளவோ மேலானவர், நினைக்கவே ரொம்ப பெருமையா இருந்தது.

தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டீங்களே அங்கேயே நீங்க ரொம்ப உயர்ந்து விட்டீர்கள்.

Unknown said...

நெம்ப தேங்க்ஸ்ங்கோ சகோதரி... .......!!!

Suresh said...

miga alagha pathivu nanba, kalakitinga ... manipu ketpagar than kadavul

Unknown said...

நன்றிங்க சுரேஷ்....

Vadielan R said...

உங்களை போன்ற மனசாட்சி உள்ளவர்களால்தான் இந்த பூமி பந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.
வளரட்டும் உங்கள் எழுத்துப்பணி

அத்துடன் உங்கள் உரைநடை நன்றாக இருக்கிறது

Unknown said...

// வடிவேலன் ஆர். said...

உங்களை போன்ற மனசாட்சி உள்ளவர்களால்தான் இந்த பூமி பந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.
வளரட்டும் உங்கள் எழுத்துப்பணி

அத்துடன் உங்கள் உரைநடை நன்றாக இருக்கிறது //



ஆஹா..!!! மிக்க நன்றி தோழரே....!! உங்களை போன்றவர்களின் வாழ்த்துக்கள் என் எழுத்துக்களை என்றென்றும் ஊக்கப்படுத்தும்....!!! உங்கள் வாழ்த்துக்கள் என்னை உற்சாகப் படுத்தியது...!!! வருகைக்கு நன்றி....!!

Tech Shankar said...

அ தே தா ன்

//கொடூரன் அழிந்ததை நினைத்து சந்தோசத்துடன் வீடு வந்து உறங்கினேன்.......

vasu balaji said...

ஜெயகாந்தனின் நான் இருக்கிறேன் அம்மா கதையில் இது போன்ற ஒரு திருப்புமுனைக் காட்சி உண்டு.

Unknown said...

// தமிழ்நெஞ்சம் said...

அ தே தா ன்

//கொடூரன் அழிந்ததை நினைத்து சந்தோசத்துடன் வீடு வந்து உறங்கினேன்....... ///



ரொம்ப நன்றி மச்சி....!! ஆனா இதுல உள்குத்து ஏதோ இருக்குற மாதிரி தெரியுதே....!!!! என்ன வெச்சு காமிடி.... கீமிடி ... ஒன்னும் பன்னுலையே.......?????

Unknown said...

// பாலா... said...

ஜெயகாந்தனின் நான் இருக்கிறேன் அம்மா கதையில் இது போன்ற ஒரு திருப்புமுனைக் காட்சி உண்டு. //

வருகைக்கு நன்றி தோழரே.....!!!


ஆஹா...!! தோழரே.... சத்தியமா இது என்னோட கததானுங்க.......!!! ஜெயகாந்தன் சாருக்க்ம் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கோவ்.....!!!!!

அன்புடன் அருணா said...

//கொடூரன் அழிந்ததை நினைத்து சந்தோசத்துடன் வீடு வந்து உறங்கினேன்........//
சந்தோஷமாக இருந்தது....பூங்கொத்து!!!

Unknown said...

@ அன்புடன் அருணா ,


நன்றிங்க சகோதரி......!!!

ivingobi said...

COngrats Mr Maddy.....

Unknown said...

// ivingobi said...

COngrats Mr Maddy..... //


thanks a lot my dear friend........