லவ்டேல் மேடி
லவ்டேல் மேடி
Wednesday, November 26, 2008
தார்மீகம் ..........
கடல் நடுவே
நிகழ்கிறது கொடுமை ,
ஓயாமல் அடித்துக் கொண்டிருந்த
அலைகள் கூட ஒருகணம்
ஸ்தம்பிக்கின்றன ,
சிறிதும் பெரிதுமாக
கரையொதுங்கி
மீளவும் கடலுள்
இழுக்கப் படாமற்ப்போன
மீன்கள்
எம்மவர் இதையத்தைப்போல
மணற்பரப்பில் துடிதுடிக்கின்றன ,
தலைக்கு மேலே காகங்கள்
அவலக் குரலில்
அழுது தீர்கின்றன ,
தூரத்தே
கன்னாப் பற்றைகளிலிருந்து
காற்று
ஓவென்று அலறுகின்றது ,
இலங்கையின் அதி உத்தம
தார்மீக அரக்கர்களினால்
ஆடப்படுகின்ற
கோரத்தாண்டவத்தில்
குதரப்படுகின்ற மனித உடல்கள்
கடற்ப்பரப்புகளை சிவப்பாக்குகின்றன ,
யனதரும் பூமியின்
கடல் மைந்தர்கள்
கழுகுகளுக்கு இரையாகுகின்றனர் ,
பயங்கரவாதிகளெல்லாம்
கடலிலே மீன் பிடிப்பவர்கள்
என்னும் ஓர் புதிய அசட்டுத்தனத்தை
யார் இவர்களுக்கு
கற்றுக் கொடுத்தது ?
என் கரைகளைத் தழுவி
முத்தமிட்டு நிற்கும்
கடல் தாயே ,
எங்களின் பசி தீர்த்துக் கொண்டிருந்த
உனக்கு
இப்படி ஓர் நாள்
அகோரப் பசி எடுக்கும் என்பதை
யாரறிந்தார் ?
ஏலேலோ ஓசை எழும்
அம்பாப்பாடல் ஒலித்த
இடத்திலெல்லாம் எம்மவரின்
ஒப்பாரியைக் கேட்க வேண்டுமென்று
நீ எத்தனை காலங்களாகக்
காத்திருந்தாய்
-ஒன்று ஞாபகம் இருக்கட்டும் ,
மூச்சடக்கி முத்துக் குளிக்கும்
எம் மைந்தர்கள்
நீ சீறியும் சினந்தும்
பொங்கியும் எழும்போது மட்டும்
எதிர் நீச்சல் போடத் தெரிந்தவர்கள் அல்ல ,
-வெண் நுரைகள் விரித்து சிதற
நீ ஒரு நாள் பெருமிதத்துடன்
பொங்கி எழுவாய் ,
எம்மவர் கரைகளிலே நின்று
ஆரவாரிப்பர் ,
-அப்போது எழும் பாடலுக்கு ஏற்ப
உனது அலைகள் தாளமிசைக்கட்டும் ,
அதுவரை -
எமது எதிரிகளின்
படகுகள் தவழ்வதர்காகவும்
உனது மடியை விரித்து
வைத்துக்கொள் ,
போர்க்காலப் பரணியுடன்
எம்மவர் எதனையும்
எதிர்கொள்வர்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
super blog. thanks for the link
மிக்க நன்றி தோழரே.... உங்கள் பெயர் மிகவும் அழகாக உள்ளது....
madyy,
where are u?
cant see u 4 long!
// thevanmayam said...
madyy,
where are u?
cant see u 4 long! ///
where u now..?
Post a Comment