லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Friday, November 14, 2008

குறுஞ்சி முள் .......

உயிர்களுக்கு இப்போது
மிகவும் மலிவான விலை ,
உணர்வுகளுக்கு
சமாதி கட்டியவர்கள்
வெறும்
உடல்களுக்கு
சந்தனம் பூசுகிறார்கள் .
மீனும் தலையும்
பாம்பும் வாலும்
நீருக்கடியிலல்ல ,
தரைக்கு மேலேதான் .
மடியிலே
பூனையைக் கட்டிக்கொண்டு
வழியிலே சகுனம் பார்த்து....
பாவம் மக்கள் .
கரையான் புற்றுக்கும்
கற்பூரம் காட்டியிருக்கிறார்கள் ,
நெருஞ்சிகள்தான்
குத்துமென்று
நெடுநாளாக
நினைத்தவர்களுக்கு
குறுஞ்சி போல்
தெரிந்தவைகளும்
குத்துமென்றால்...
உண்மை
இப்போதாவது
தெரிந்ததே
கண் கெட்டுவிடவில்லைதான் ,
இனியும் -
சூரிய வணக்கம் செய்யலாம் ,
நம்புகிறார்கள் மக்கள் .

9 comments:

Anonymous said...

அழகான கவிதை!
:)

-Mathu

அதிரை ஜமால் said...

//உயிர்களுக்கு இப்போது
மிகவும் மலிவான விலை ,
உணர்வுகளுக்கு
சமாதி கட்டியவர்கள்
வெறும்
உடல்களுக்கு
சந்தனம் பூசுகிறார்கள் .
மீனும் தலையும்
பாம்பும் வாலும்
நீருக்கடியிலல்ல ,
தரைக்கு மேலேதான் .
மடியிலே
பூனையைக் கட்டிக்கொண்டு
வழியிலே சகுனம் பார்த்து....
பாவம் மக்கள் .
கரையான் புற்றுக்கும்
கற்பூரம் காட்டியிருக்கிறார்கள் ,
நெருஞ்சிகள்தான்
குத்துமென்று
நெடுநாளாக
நினைத்தவர்களுக்கு
குறுஞ்சி போல்
தெரிந்தவைகளும்
குத்துமென்றால்...
உண்மை
இப்போதாவது
தெரிந்ததே
கண் கெட்டுவிடவில்லைதான் ,
இனியும் -
சூரிய வணக்கம் செய்யலாம் ,
நம்புகிறார்கள் மக்கள் .//

வரிக்கு வரி பாரட்டனும் போல இருக்கு.

மீண்டும் ஒரு முறை சமயம் வரும் போது வருகிறேன்.

madyy said...

நன்றி மதுகிருஷ்ணா,

மிக்க நன்றி அதிரை ஜமால்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

"உணர்வுகளுக்கு
சமாதி கட்டியவர்கள்
வெறும்
உடல்களுக்கு
சந்தனம் பூசுகிறார்கள் ."
ஆம் ஆசாடபூதிகளின் காலம் தான் கோலோச்சுகிறது.
அருமையான கவிதை.

லவ்டேல் மேடி said...

@ முருகானந்தம் ,


நன்றி தோழரே .....

ராமலக்ஷ்மி said...

அருமையான வரிகள்.

உங்கள் ஒவ்வொரு பதிவையும் தனித்தனியாகத் திறந்து பார்த்ததில் நீங்கள் எதையுமே தமிழ் மணத்தில் இணைக்கவில்லை என அறிய வந்தேன்.

ஏன்?

நீங்கள் சொல்ல வரும் நல்ல விஷயங்கள் வலைப்பூவைத் தேடி வருபவர்களுக்கு மட்டும்தானா? (வலைப்) பூவை (தமிழ்) மணக்க விடலாம்தானே? வேடிக்கைக்கு கேட்கவில்லை. சீரியஸா அக்கறையின் பேரில் கேட்கிறேங்க. பதில் ப்ளீஸ். விகடன் முகப்பில் உங்களைப் படம் மூலம் மட்டுமல்ல படைப்புகள மூலமும் காண விரும்பி...

உங்கள் நலம் விரும்பி:)!

லவ்டேல் மேடி said...

தமிழ்மணத்தில் இனைய முயற்சித்தேன்.... ஆனால் ஏனோ அதில் இனைய மறுக்கிறது .......


என் மணம் அல்ல ..... என் வலைப்பூ.......சரி விதி வழியது ........ என்று....... என்னவர்களுக்கு மட்டும் " அறுசுவை " ( முக்கியம் அறுசுவை ) யாக விருந்தளிக்கிறது....... என் பதிப்புகள்.....!! இது போதுமென என் நினைவு ஆலோசிக்க..... அதை அங்கிகரித்தது என் மணம்.....!!!

நன்றிங்க சகோதரி.........!!!!

ராமலக்ஷ்மி said...

//இணைய மறுக்கிறது//

ம்ம்ம்.

//விதி வலியது//

விதியை மதியால் மட்டுமின்றி நட்பாலும் வெல்லலாமே:).

உங்களுக்கு எத்தனை நண்பர்கள் வலையில்? விவரம் அறிந்த யாரிடமாவது கடவுச்சொல்லோடு [ஒரு நாளுக்கு:)] பூவை ஒப்படைத்து சரி செய்ய அன்புக் கட்டளை பிறப்பிக்க வேண்டியதுதானே. இது ஒரு சஜஷன்தான். பிறகு உங்கள் விருப்பம்.

லவ்டேல் மேடி said...

சரிங்க சகோதரி......!! கண்டிப்பா செஞ்சுடறேன்......!!!