லவ்டேல் மேடி

லவ்டேல் மேடி

Thursday, November 13, 2008

ஈழத்தின் குரல்

இறுதியிலும் இறுதியாக
இனி -
எவற்றை எம்மிடமிருந்து
உன்னால் பறிக்க முடியும் ,
அந்திசாய
அழகு காட்டும்
அடிவானம் ,
இப்போது பிரதிபலிப்பது
எங்கள் மக்களின்
மனங்களை ,
இது நிரந்தரமானதல்ல .
எமது வயல்
எமது தோட்டம்
எமது தோப்பு
அழிக்கப்பட்டவையாக
மட்டுமல்ல ,
புதிய விதைகளை
மண்ணில்
புதைத்தவையாகவும் உள்ளன ,
எங்கள் மண்ணில் வளம்
இன்னும்
புதிய மலர்களை
இந்த மண்ணில் புஸ்பிக்கும் ,
கவச வாகனங்கள்
உழவு செய்ய ,
சப்பாத்துக் கால்கள்
உரம்போட ,
குருதி மணிகள்
விளையும் -
எங்கள் பூமியின்
நாளைய அறுவடைகள்
ஒன்றுக்குப் பத்தாக
நூறாக
ஆயிரமாகவும் இருக்கும் ,
நாளை
" உனக்கு ஞானம் தரும் "
போதி மரத்துக்கான
" விதைகள் "
எமது மண்ணில்தான்
ஊன்றப்படுகின்றன .

2 comments:

Anonymous said...

//" உனக்கு ஞானம் தரும் "
போதி மரத்துக்கான
" விதைகள் "
எமது மண்ணில்தான்
ஊன்றப்படுகின்றன .//

உண்மை..

madyy said...

நன்றி.......